SMS மூலம் Email பெற…

SMS மூலம் Email பெற…

email-sms
உங்களுக்கு வரும் இமெயில்களை SMS ஆக பெறலாம். நீங்கள் செட் செய்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் அனைத்து புதிய மின்னஞ்சல்களும் உடனுக்குடன் SMS ஆக உங்கள் மொபைலை வந்தடையும்.
ஜிமெயிலில் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை எஸ்.எம்.எஸ். ஆக பெறும் வழிமுறைகளை இப்பதிவில் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.
நீங்கள் ஒரு ஜிமெயில் பயனாளர் எனில் உங்களுடைய செல்போனுக்கே புதிய இமெயில் செய்தியை SMS ஆக பெற முடியும். உங்களுக்கு வரும் முக்கியமான மின்னஞ்சல்களை (நீங்கள் குறிப்பிடும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து) மட்டும் SMS மூலம் பெறும் வழிமுறைகளைப் பார்ப்போம்.
செட்டிங்ஸ் 1: 
  • உங்கள் ஜிமெயில் கணக்கில் உள் நுழைந்து (login) கொள்ளுங்கள்
  • செட்டிங்ஸ் ஐகானை அழுத்தி Settings செல்லுங்கள்..
get-email-through-sms-in-mobile-phone-step1
 செட்டிங்ஸ் பகுதி திறந்ததும் லேபிள் செல்லுங்கள்.  sendsms என்ற புதிய லேபிள் ஒன்றை உருவாக்குங்கள்.
get-email-through-sms-in-mobile-phone-step2
  • அடுத்து “பில்டர்” Filter அழுத்தி புதிய பில்டர் (Create)ஒன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதற்கு,
  • பில்டர் படிவத்தில் இரண்டு முக்கியமான விடயங்களைச் செய்ய வேண்டும்.
1. ஃபில்டர் ப்ரம் (Filter From) என்பதில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான மின்னஞ்சல் முகவரியை மட்டும் தட்டச்சிட்டு, நிரப்புகள்.
2. Has the word என்ற கட்டத்தில் is:inbox என தட்டச்சிட்டு இறுதியில் உள்ள create filter with this search என்பதை  கிளிக் செய்யுங்கள்.
  • பிறகு அப்ளை தி லேபிள் (apply the label) என்பதை டிக் மார்க் ஏற்படுத்திக்கொண்டு, இறுதியில் Create Filter என்ற பட்டனை அழுத்தவும்.
செட்டிங்ஸ் 2: 
  • அதற்கு அடுத்து Google Docs ல் உள் நுழையுங்கள்..
  • பிறகு இதை கிளிக் செய்து யெஸ் மேக் ஏ காபி (Yes, make a copy)என கொடுக்கவும்.
  • அப்பக்கத்தில் Tools ==> Script Editor செல்லுங்கள். அதில் Resources==>current Current Projects Tiggers என்பதை அழுத்துங்கள்.
  • தோன்றும் பக்கத்தில் click here to add one now என்பதை அழுத்தி From Spreadsheet என்றிருப்பதை  Time-Driven என்று மாற்றுங்கள்.
  • அடுத்து Hour, Timer என்றிருப்பதை Minute Timer என மாற்றிவிடுங்கள்.
  • இறுதியாக Save கொடுத்துவிடுங்கள். இப்பொழுது Authorzie கேட்கும். கன்டினியூ கொடுத்து access செய்யுங்கள்..
  • அதற்கு அடுத்து கூகிள் காலண்டர் செல்லுங்கள். அதில் மொபைல் செட்டப் (Mobile Setup) என்பதைச் சொடுக்கி, phone number என்பதில் உங்களுடைய செல்போன் நம்பரைக் கொடுக்கவும்.
  • பிறகு Send verification code என்பதை அழுத்துங்கள். அடுத்த ஒரு சில விநாடிகளில் உங்களுடைய செல்போன் நம்பருக்கு வெரிபிகேஷன் கோட் வரும். அதை வெரிபிகேஷன் கோட் கட்டத்தில் கொடுங்கள்.
அவ்வளவுதான்..
இனி நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து ஏதேனும் புதிய மின்னஞ்சல் அனுப்பட்டால் ஐந்து நிமிடத்தில் உங்களுக்கு SMS Alert ஆக அந்த மின்னஞ்சல் உங்கள் மொபைலுக்கு வந்து சேரும்.
மிகவும் பயனுள்ள இப்பதிவை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்ளுங்கள்.. உடனடியாக அவர்களுக்கு மின்னஞ்சலை SMS மூலம் பெற உதவியாக இருக்குமே.. !!

போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிவதற்கு

போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிவதற்கு

1236686_543620255711165_1985567500_n
உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் யார் அனுப்பினார்கள் என்றே தெரியாமல் வந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வதே இல்லை. ஆனால் அப்படியான மின்னஞ்சல்கள் ஆபத்து நிறைந்தவை. அவற்றில் பல உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் அனுப்பப்பட்டவையாக இருக்கும்.
இவற்றை அனுப்புவபர்கள் தமது பெயரை மறைத்தே அனுப்புவார்கள். இப்போது ஜிமெயில், யாகூ போன்ற பிரபல மின்னஞ்சல் வழங்குனர்கள் Spam Filters ஐ பயன்படுத்தி இவ்வாறான மின்னஞ்சல்களை இனங்கண்டாலும், அதையும் மீறி சில மின்னஞ்சல்கள் வரத்தான் செய்கின்றன.
Phissing எனப்படும் முறையை பயன்படுத்தி அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்கள் Spam Filters இன் கண்களில் இருந்து தப்பிவிடுகின்றன. கடந்த சில மாதங்களாக இவ்வாறான Phissing மின்னஞ்சல்கள் பரவலாக எல்லோருக்கும் வரத்தொடங்கியுள்ளன.
ஆகவே அடையாளம் தெரியாமல் வரும் மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதுதான் பாதுகாப்பு. அப்படி இல்லை கட்டாயம் திறந்து பார்க்க வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது ஒரு வழி
உங்களுக்கு வரும் மின்னஞ்சலின் முகவரியை இந்த தளத்தில் கொடுத்தால் அது பற்றிய சகல விபரமும் கொடுக்கிறார்கள்.
அது போலியாக இருந்தால் சிவப்பு நிறத்தில் அடையாளமிட்டு காட்டும். அருகில் உள்ள info என்பதை கிளிக் செய்தால் அந்த மின்னஞ்சல் முகவரி தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
இணையதள முகவரி

பேஸ்புக் பயன்படுத்துபவர் இறந்த பின்னர் அவரது கணக்கிற்கு என்ன நடக்கும் என்று தெரியுமா

பேஸ்புக் பயன்படுத்துபவர் இறந்த பின்னர் அவரது கணக்கிற்கு என்ன நடக்கும் என்று தெரியுமா?

news_19077
இன்று சமூக வலைத்தளங்களில் அக்கவுன்ட் வைத்திருப்பது என்பது அனைவரும் தற்போது கட்டாயம் செய்துவரும் கடமையாக மாறிவருகிறது எனலாம். இதே போல் பேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்திருக்கும் ஒரு நபர் இறந்துவிட்டால் அவரது அக்கவுன்ட் என்ன ஆகும் என்று தெரியுமா?
அது டி ஆக்டிவெட் ஆகாதுங்க மாறாக கீழே இருக்கும்படி பயன்படுத்தலாம். பொதுவாக, இறந்தவரின் குடும்பத்தினர், அவரின் பேஸ்புக் அக்கவுண்ட், அவரின் புகைப்படம், அவர் பதித்த புகைப்படங்கள், தெரிவித்த தகவல்கள் என அனைத்தும், தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கவே விரும்புவார்கள்.
பேஸ்புக், அக்கவுண்ட் ஒன்றை, அதற்கானவரின் மரணத்திற்குப் பின்னால், நினைவாக வைத்திருக்க வழி தருகிறது. இதனை memorialized அக்கவுண்ட் என அழைக்கிறது.இந்த வகை அக்கவுண்ட் வழக்கமான அக்கவுண்ட் போஸ்டிங்கிலிருந்து வேறுபட்டது. இந்த அக்கவுண்ட்டில் யாரும் லாக் இன் செய்திட முடியாது. புதியதாக எந்த ஒரு நண்பரின் வேண்டுகோளும் ஏற்றுக் கொள்ள இயலாது. இந்த அக்கவுண்ட்டில், அதனை உருவாக்கியவரின் தனிப்பட்ட செட்டிங்ஸ் பாதுகாக்கப்படும்.
எனவே, இறந்தவரின் அக்கவுண்ட்டிற்கு, அவருடைய நண்பர்கள், டைம்லைனில், தகவல்களைப் பதியலாம். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அதில் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். பிரைவேட் மெசேஜ் எனப்படும் தனிப்பட்ட தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இறந்தவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அப்படியே வைக்கப்படும். நண்பர்கள் அவற்றை எந்த நேரத்திலும் பார்க்கலாம்.
போட்டோக்கள், ஸ்டேட்ட்ஸ் அப்டேட் தகவல்கள், லிங்க்ஸ், வீடியோஸ் இன்னும் பிற நண்பர்களின் பார்வைக்கு எப்போதும் கிடைக்கும். இருப்பினும், நண்பர்களுக்கு சிறப்பு நிகழ்விற்கான நினைவுக் குறிப்புகள் கிடைக்காது. நீங்கள் அறிந்த நண்பர்கள் என்ற பட்டியலில், இறந்தவரின் பெயர் இருக்காது. அக்கவுண்ட் ஒன்றை நினைவக அக்கவுண்ட்டாக அமைக்க அதற்கென்று இருக்கும் முகவரியில் உள்ள விண்ணப்பத்தினை, இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் நிரப்பி அனுப்பவும்.
இதில் கேட்டுள்ள இறப்பு சான்றிதழ்களையும் அனுப்ப வேண்டியதிருக்கும். இல்லை எனில், நம் மக்கள் உயிரோடு இருக்கிறவர்களின் நெருங்கிய உறவினர் என பொய்யாக, விண்ணப்பத்தினை அனுப்பிவிடுவார்கள் இல்லையா?…

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?

images
கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.
சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
ஹார்ட்வேர் பிரச்னை
கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
ரம் மெமரி சிப்ஸ்
ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
ஹார்ட் டிஸ்க் டிரைவ்
பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
வீடியோ கார்ட்
சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
வைரஸ்
பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிரிண்டர்
பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
சாப்ட்வேர்
முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
அதிக வெப்பம்
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.

உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?

உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?

நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை  பயன்படுத்துவீர்கள் இதனை  எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய   Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை  பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.
Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியின் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிறது Desktop கணினி என்றால் Wireless Device  தனியாக போட்டிருக்கவேண்டும்
சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்
1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும்
3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இது பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளவும் :)

esktopல் iconகள் குறிப்பிட்ட நேரத்தின்பின் மறைய

Desktopல் iconகள் குறிப்பிட்ட நேரத்தின்பின் மறைய

நாம் நமது desktopல் குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தேவையான iconகளை மட்டும் வைத்துக் கொள்ளலாம். 
அந்த iconகளையும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தோன்றுமாறு அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நமது desktopல் எந்த ஒரு iconம் இருக்காது. இதனை நிறுவியதும் உங்களுக்கு ஒரு window open ஆகும். அதில் எவ்வளவு நேரத்திற்கு பின்னர் உங்களுக்கு desktopல் உள்ள iconகள் மறைய வேண்டுமோ அந்த நேரத்தை set செய்திடவும். ஒரு நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை நாம் நேரம் set செய்திடலாம். அந்த நேரம் ஆனதும் உங்களுக்கு கீழ்கண்ட slideல் நேரம் நகர ஆரம்பிக்கும். குறிப்பிடட நேரம் ஆனதும் உங்களுக்கு desktopல் உள்ள iconகள் மறைந்துவிடும். 
 தரவிரக்கம் செய்ய

வீடியோ மெயில் இலவசமாக அனுப்பலாம்.

வீடியோ மெயில் இலவசமாக அனுப்பலாம்.

வீடியோ இமெயில் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
சில நேரங்களில் நாம் என்ன தான் இமெயில் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய செய்தியை வெப் கேமிரா  மூலம் பேசி வீடியோ மெயிலாக உடனடியாக அனுப்பலாம்.
இணையதள முகவரி
இத்தளத்திற்கு சென்று நாம் படத்தில்  காட்டியபடி Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கேமிரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை  சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம். அடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை  பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில்  யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் இமெயில் முகவரி மற்றும் நம் இமெயில் முகவரி, பெயர் , வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text  என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம், இங்கு கொடுத்திருக்கும் Notify me when this message read என்ற செக் பாக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு இமெயில் வரும். பெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு  எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மீச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மெயிலாக தமிழ் மொழியிலே பேசி அனுப்புவோம்.

One Time Read Mail

ஒருமுறை மட்டும் படிக்கக்கூடிய email அனுப்ப


மின்னஞ்சல் என்பது தவிக்க முடியாத ஒன்றாகி விட்டது நாம் ஒவ்வொரு நாளும் நிறைய மின்னஞ்சல் அனுப்புகிறோம்  ஆனால்  அவைகளில் சில முக்கியமான தகவல்களும் அடங்குகின்றது  நம்மை தவிர யாரும் பாத்து விட கூடாது என்கிற தகவல்களையும் அனுப்புகின்றோம் . இணையத்திருடர்களால் நம்முடைய கணக்கு திருடப்பட்டால் கூட  நம்முடைய இரகசியங்களை யாரும் பாத்திடா வண்ணம்  ஒரு முறை பாக்க கூடிய மின்னஞ்சல்களை எப்படி அனுப்பலாம் என்று பார்ப்போம்
 அழகாக மின்னஞ்சல் அனுப்ப மென்பொருள் என்ற பதிவில் எப்படி அழகாக முன்னன்சல் அனுப்புவது என்ற பதிவையும் பாருங்கள்
காதலை சொல்ல கூட இதனை பயன்படுத்தலாம் காரணம் அண்ணாவிடம் போட்டு குடுக்க முடியாது …
சரி இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம் அதற்கு தீர்வாக தான் ஒரு இணையதளம் உள்ளது. கீழே உள்ள சுட்டியில் சென்றவுடன் தோன்றும் விண்டோவில் சென்று  அனுப்ப வேண்டிய தகவலை தட்டச்சிடவும்.
அதன் பின் தங்களுக்கு ஒரு தொடுப்புக் கிடைக்கும். அதை தகவல் சேர வேண்டியவருக்கு எப்படியாவது அனுப்பிவிடுங்கள்.
அவர் திறந்து வாசிக்கலாம் அதன் பிறகு அவர் மூடி விட்டுத் திறந்தால் மறுபடியும் அங்கே தகவல் இருக்காது.

அடுத்தவர் மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பலாம்

அடுத்தவர் மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பலாம்

இந்த வழிமுறையை உங்களுக்கு தெரிந்துகொள்ள மட்டுமே தயவுசெய்து நீங்கள் இதனை தவறான வழிக்கு பயன்படுத்தாதீர்கள் குற்றம் செய்ப்வர்கள் நெடு நாட்கள் தப்பிக்க முடியாது.
உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சில தளங்களில் நுழைவதற்கு பயன்படுத்துவீர்கள் அங்கு தான் உங்கள் மின்னஞ்சல் மற்றவர்களுடைய கைகளுக்கு போகிறது அதாவது நீங்கள் மின்னஞ்சல் கொடுத்து நுழைகிற தளங்களில் இருந்து அவர்களே உங்கள் முகவரிகளை விற்க கூடும் இல்லையென்றால் இனையத்தில் பதிந்திருக்கும் மின்னஞ்சல் முகவரிகளை படிப்பதற்கென்றே(விபரம் தெரிந்தவர்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கொடுக்கும் போது @ என்படை (at) எனவும் . என்பதை (dot) எனவும் எழுதுவதை பார்த்திருப்பீர்கள் ஆனாலும் இது தீர்வல்ல) சில ரோபட்கள் இயங்கும் இவை உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை படித்து தயாரித்த நபர்களுக்கு அனுப்பிவிடும் அதை அவர்கள் முறைகேடாக பலான தளங்கள் இன்ன பிற தளங்கள் தங்கள் விளம்பரத்துக்காக வாங்கி கொண்டு அதன் வழியாக அவர்கள் தள விளம்பரத்தை அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள்.
சரி இது போலவே நாமும் நமக்கு தெரிந்த ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை வைத்து வேறு யாருக்காவது மின்னஞ்சல் அனுப்ப முடியுமா எனக் கேட்டால் அனுப்ப முடியும் என்பதே பதில் இதற்கெனவே சில தளங்கள் இயங்குகின்றன நான் சிலவற்றை இங்கு தருகிறேன்.