மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (4) - Photoshop, Illustrator, InDesign/Adobe CS

மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (4) - Photoshop, Illustrator, InDesign/Adobe CS



அடோப் கிரியேடிவ் சூட் (Adobe Creative Suite) எனப்படும் மென்பொருள் தொகுப்பில் 10க்கும் மேற்பட்ட மென்பொருள்களை ஒன்றாக இணைத்து வழங்குகிறது அடோப் நிறுவனம். சமீபத்தில் வெளியான பதிப்பு Adobe Creative Suite 5 (CS5). அடோப் கொடுக்கும் இந்த மென்பொருள்களை மூன்று வகையாக பிடிக்கலாம்.

1.
கிராஃபிக்ஸ் டிசைன் மென்பொருள்கள் (Design Premiun)
·                     Photoshop
·                     Illustrator
·                     InDesign
·                     Flash Catalyst
·                     Flash Professional
·                     Dreamweaver
·                     Fireworks
·                     Acrobat
·                     Bridge
·                     Device Central
2. இணைய பயன்பாட்டு மென்பொருள்கள் (Web Premium)
·                     Dreamweaver
·                     Flash Catalyst
·                     Flash Professional
·                     Flash Builder
·                     Photoshop
·                     Illustrator
·                     Acrobat
·                     Fireworks
·                     Contribute
·                     Bridge
·                     Device Central
3. ஒளிப்பட தொகுப்பு மென்பொருள்கள். (Production Premium)
·                     Adobe Premiere
·                     After Effects
·                     Photoshop
·                     Illustrator
·                     Flash Catalyst
·                     Flash Professional
·                     Soundbooth
·                     Adobe OnLocation
·                     Encore
·                     Bridge
·                     Device Central
·                     Dynamic Link
ஒவ்வொன்றின் உபயோகம் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம். சிலவற்றிற்கு லிங்க்-ம் கிடைக்கும்.


1.
அடோப் ஃபோட்டோஷாப்:
ஃபோட்டோஷாப் பற்றிய பல  பிளாக்குகள் உள்ளன. அவற்றை கற்றாலே ஓரளவுக்கு அடிப்படை அறிவு வந்துவிடும். படங்களை கையாளுதல், படம் வரைதல், கிராபிக்ஸ் டிசைனிங், பேஜ் லே அவுட், அச்சுக்கலை, வெப் ப்டங்கள், அனிமேஷன் gifs போன்ற பல விசயங்களை கற்க ஃபோட்டோஷாப் பயன்படுகிறது. ms-office தெரிந்து கொள்வது அவசியம் என்பது போல ஃபோட்டோஷாப்பை அறிவது அவசியமாகும். 2டி, 3டி அனிமேஷன், அச்சுக்கலை, ஒளிப்படக்கலை போன்ற எல்லா துறைகளுக்கும் ஃபோட்டோஷாப் பயன்படுகிறது. Photoshop, Photoshop extended என இரண்டு வெர்சன்கள் வருகின்றன. இரண்டாவதில் வசதிகள் அதிகமாக இருக்கும். போட்டோஷாப்புடன் Image ready என்னும் மென்பொருளும் கிடைக்கும். இதுவும் போட்டோஷாப் போன்றதே பெரிதாக வித்தியாசமில்லை. (இது gif, slicing போன்றதற்கு சிறந்தது)

டவுன்லோட்: அடோப் cs 5 portable 123 mb

இங்கே சில ஃபோட்டோஷாப் தொடர்பான சில டூல்களை தந்துள்ளேன்.
3700 fonts (torrent) 74 mb
Rare photoshop brushes (rapidshare) 61 mb 
Rare photoshop actions 105 mb

2.
அடோப் இல்லஸ்ட்ரேட்டர்
இது ஒரு vector graphics editor. (vector graphics என்பது points, lines, curves, மற்றும் shapes ஆகியவற்றை பயன்படுத்தி வரையப்படும் படங்கள் ஆகும்.) அடோப் ஃபோட்டோஷாப்பை விட பல கடினமான அழகிய படங்கள் டிசைன்களை இதில் உருவாக்குவது எளிது. மற்றபடி ஃபோட்டோஷாப்பில் செய்யக் கூடியவற்றை இங்கேயும் செய்யலாம்இது கிட்டதட்ட போன பதிவில் பார்த்த Visioவை போன்றது.

டவுன்லோட்: adobe illustrator portable 200mb part 1 part 2

3.
அடோப் இண்டிசைன்
இது போஸ்டர்கள், லெட்டர்பேட், துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் போன்ற பலவற்றை வடிவமைக்க ஏற்ற மென்பொருள். பொதுவாக புத்தகங்கள் தயாரிக்க சிறந்த மென்பொருள். இது சென்ற பதிவில் பார்த்த Publisher மற்றும் coreldraw போன்றது. ஆனால் இது போட்டி மென்பொருள் QuarkXPress ஆகும். அடோப் சிஸ்-ல் இல்லாத அடோபின் ஒரு மென்பொருளான  page maker-க்கு பதிலாக அடோப் வடிவமைத்த மென்பொருள் இதுவாகும்.

டவுன்லோட்: Adobe InDesign CS5 Portable 171 mb


மீதி அடுத்த பதிவில்....

உங்களை நீங்களே அழகுபடுத்த:
பல படங்களில் (நம் புகைப்படத்தையும் சேர்த்து) அழகுபடுத்த நினைப்போம். குறிப்பாக முகங்களை. போதுமான ஃபோட்டோஷாப் அறிவு இருந்தால் இது சாத்தியம். ஆனால் சாதாரணமானவர்களுக்கு? அதற்காகவே இந்த மென்பொருள். மேக்கப் மென்பொருள் (பவுடர், லிப்ஸ்டிக், ஷேடோ என எல்லாமே இருக்கும்)
AMS_Photo_Makeup_Editor (6.5 mb)

இன்னொன்று ஹேர் ஸ்டைலை மாற்ற: 
Maggi.Hair.and.Cosmetics.v6.0 (3.5 mb) 
Virtual Hairstyle Fab (19.7 mb)


மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (3)

மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (3) - Publisher,Infopath, Sharepoint, Outlook, Project, Communicator, Access, OneNote, FrontPage, Visio/MS-OFFICE
Ms-Publisher
இப்படி ஒரு சாஃப்ட்வேர் MS-OFFICE கூட இருக்குன்னு நிறைய பேருக்கு தெரியுமோ தெரியாதோ! ஆனால் இதன் பயன்கள் மிக அதிகம். இன்று பலர் ப்ரிண்ட் மீடியாவிற்கு corel draw பயன்படுத்துகின்றனர். ஆனால் அதைவிட எளிதான அதே உபயோகமுள்ள மென்பொருள்தான் Publisher. விசிடிங் கார்ட்கள், காலண்டர்கள், பிரவுச்சர்கள், லெட்டர்பேட், நியூஸ்லெட்டர் போன்ற பலவற்றை எளிதில் உருவாக்கலாம். இதில் ஏற்கனவே டெம்ளீட்கள் உள்ளதால் அவற்றை விரைவாக செய்யலாம். நான் கடந்த மூன்று வருடங்களில் உருவாக்கிய பேனர், காலாண்டர், ஸ்டிக்கர், லெட்டர்பேட், போன்ற டிசைன்கள் அனைத்தையும் இந்த மென்பொருளிலேயே செய்திருக்கிறேன். ஆனால் பல நிறுவனங்கள் corel drawயே பயன்படுத்துவதால் இதில் நாம் வேலை செய்தாலும் source ஃபைலை வாங்க மறுக்கிறார்கள். (நான் இமேஜாகத் தான் டிசைன்களை கொடுத்தேன்.) 

நீங்களே உங்களுக்கான அழகான விசிடிங் கார்டை உருவாக்கி தொடங்கி பாருங்கள்.


Microsoft Infopath

simple மற்றும் complex-ஆன formகளை உருவாக்க இது பயன்படுது. இதை பயன்படுத்தி ஃபார்ம்களை யார் வேணாலும் எளிதாக உருவாக்கிடலாம். ஆனால் அதை வெப் பேஜில் கொண்டு வர கொஞ்சம் புரோக்ராமிங் தெரியணும். மேலும் இதுக்கு Ms-Sharepoint அப்படிங்கிற இன்னொரு Ms-office தொடர்பான சாஃப்ட்வேர் தேவை.



Ms-Sharepoint
இது ஒரு தனி செர்வரின் கீழ் web publishing-காக பயன்படுகிறது. இந்த சாஃப்ட்வேரினால் எல்லோரும் தகவல்களை பரிமாரிக்கலாம். வெப் பேஜை செட் அப் செய்யலாம், அதில் உள்ள ஃபைல்களை எடிட் செய்யலாம். பேருக்கேத்த மாதிரி எல்லோரும் பகிர்ந்து வேலை செய்ய இந்த மென்பொருள்.

Outlook

இதுவும் சரி, Outlook express-ம் சரி ஒரே வேலைதான் செய்யுது. முதாலவது ms-office கூட வருது. இரண்டாவது operating system கூடவே வருகிறது. அவ்வளவுதான். gmail, yahoo  போன்ற மின்னஞ்சல் செர்வர்களுக்கு பிரவுசர் மூலமாக செல்லாமல் நேரடியாக மின்னஞ்சல்களை பார்க்கவும், offline-ல் பழைய மின்னஞ்சல்களை பார்க்கவும் பயன்படுகிறது. இதை gmail உடன் எப்படி set up செய்யவது என்று google தகவல் தருகிறது. லிங்க்: Outlook 2003 configuration



Microsoft Project

இந்த சாஃப்ட்வேர் முழுக்க முழுக்க புரொஜக்ட் மேனேஜர்களுக்காக மட்டுமேபுரொஜக்ட் பிளான்களை மேம்படுத்தவும், வேலைகளுக்கு resources களை கொடுக்கவும், புராசஸ் எப்படி இருக்கு பார்க்கவும், பட்ஜெட் சரியா இருக்கிறதா என சரிபார்க்கவும் இப்படி முழுமையா ஒரு புரொஜக்ட் மேனேஜரின் வேலையை எளிதாக்க பயன்படும் சாஃப்ட்வேர் இது. [இந்த அளவுக்கு வேலை பார்க்கிறவங்களுக்கு இந்த சாஃப்ட்வேரே தேவையில்லை!  Communicator
இது ஒரு instant messaging software ஆகும். instant messaging மட்டுமில்லாமல், Voice Over IP, மற்றும் Video Conferencing போன்றவற்றையும் எளிதாக செய்யலாம்.மற்ற Ms-office அப்ளிகேஷன்களோடு இணைந்து வேலை செய்யும்.இது வேலை செய்யும் விதம் பற்றிய வீடியோக்களை இங்கே காணலாம்.

http://office.microsoft.com/en-us/communicator-help/demo-use-office-communicator-2007-to-collaborate-with-colleagues-HA010240260.aspx

Access
இது செர்வர் டேடாபேஸ்களை கையாளுவதற்கான மென்பொருள். அதிக பயிற்சியில்லாத ஒருவர் டேடாபேஸை எளிதாக கையாள இது உதவுகிறது. சாதாரணமாக இல்லாமல், மேம்படுத்தப்பட்ட வகையில் பல விதங்களில் MySQL, Oracle போன்ற டேடாபேஸ்களை கையாள உதவுகிறது. இது Software developers மற்றும் data architects ஆகியோருக்கு சிறந்த மென்பொருள் ஆகும்.
OneNote
கல்வி, அலுவலகம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக தகவல்களை சேமிக்க உதவும். மென்பொருள். படங்கள், ஒலிகள், இணையப் பக்கங்கள் ஆகியவற்றை இணைக்கலாம். மேலும் மற்ற ms-office மென்பொருள்களில் செய்யக் கூடிய டிசைனிங் & ஃபார்மெட்களையும் செய்யலாம். சேகரித்த தகவல்களை ஒழுங்குபடுத்தி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

FrontPage

இது கிட்டத்தட்ட dreamweaverக்கு ஒப்பானது. எளியமுறையில் இணையப் பக்கங்களை உருவாக்க பயன்படுகிறது.இரண்டுமே WYSIWYG editorதான் என்றபோதும், dreamweaver-ல் நீங்கள் html கோட்களை அதிகமாக பயன்படுத்த வேண்டியிருக்கலாம். ஆனால் FrontPage-ல் எல்லாவற்றையும் எளிதாக வடிவமைத்து நேரத்தை மிச்சமாக்கலாம். html கோட்களை பற்றி தெரியாதவர்கள் ஆரம்பத்தில் வெப் பேஜ்களை அமைக்க FrontPage சிறந்தது. html கோட்களை கற்றுக் கொண்டபின் dreamweaverக்கு மாறலாம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSKjzgwyMr-FVW4_4yLmy7IRGAsIyrodrJM9F5Az668ueCEClbb4IW3R2LUXt-Y9NUhk0ZkUpAaoKXNV_3x9xdydTIS2ZBqsip_1zo2SArWC-fNnOgc0sczrihZVJ80DoOUq3w-fxPwnY/s640/frontpage.jpg

டவுன்லோட் லிங்க்:http://www.megaupload.com/?d=0MPMXPB0 (194 mb)

Microsoft Visio


Microsoft Visio
இது வரையும் சாஃப்ட்வேர். ஃப்ளோசார்ட்கள் உருவாக்க சிறந்தது. ஃப்ளோசார்ட்களை எக்சலிலேயே நன்றாக உருவாக்கலாம் என்றாலும் இதில் கொஞ்சம் மாடலிங் டெக்னிக் உள்ளது அதனால் ஓரளவு 3டி எஃபக்ட் கிடைக்கும்இதன் மூலம் லோகோ டிசைன்களை கூட எளிதாக உருவாக்கலாம். பில்டிங் பிளான், எலக்ட்ரிகள் சர்க்யூட், மெக்கானிகல் பார்ட்ஸ், போன்ற பல வடிவங்கள் வெக்டார்  வடிவில் உருவாக்க முடியும். இதை கற்றுக் கொள்ள தனி டுடோரியலே உண்டு.

டவுன்லோட் லிங்க்: Microsoft visio portable  (113 mb)


இத்துடன் MS-OFFICE தொடர்பான அனைத்து மென்பொருட்களை பற்றியும் குறிப்பிட்டாகி விட்டது. எல்லா மென்பொருளும் MS-OFFICE-ன் எல்ல தொகுப்புடனும் வராது. சில தொகுப்புகளில் சில மென்பொருட்கள் இருக்கும், சில இருக்காது. அதேபோல் முக்கியமானவைகளுக்கு மட்டுமே லிங்க் தந்துள்ளேன்.