மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (2)


அடுத்து Ms-Power point.
பவர்பாயிண்ட் பயன்படுவது PRESENTATIONகளை செய்யத்தான். பிரசண்டேசன் என்பவை நீங்கள் உங்கள் புரொஜக்ட்காகவோ அல்லது வேறு விசயங்களுக்காகவோ இருக்கலாம். அனிமேசனை எளிதில் செய்து பார்க்க நல்ல மென்பொருள் பவர்பாயிண்ட்தான். அந்த எழுத்துகளையும் படங்களையும் நகரவைத்து மறைய வைத்து பார்க்கும்போது புதிததாக செய்பவர்களுக்கு எதையோ பெரிதாக செய்வது போன்ற சந்தோசத்தை அளிக்கும்.

உண்மையில் பவர்பாயிண்டை வெறும் அலுவலக, கல்வி பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் மற்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். பவர்பாயிண்ட் மூலம் நாம் விழாக்களில் எடுக்கும் புகைப்படங்களை வைத்து அழகாக ஸ்லைட் ஷோவை இசையுடன் செய்து சிடியாக மாற்றலாம்.

அப்புறம் ஒரு சின்ன விசயம்:வேர்ட் ஃபைலில் நாம் டைப் செய்தவற்றை பவர்பாயிண்ட்டாக மாற்றலாம். தலைப்பாக வரவேண்டிய வாக்கியத்தை செலக்ட் செய்து அதன் ஸ்டைலை Heading 1ஆக மாற்றவும். பிறகு கீழே வரவேண்டிய தகவல்களை செலக்ட் செய்து அவற்றின் ஸ்டைலை Heading 2ஆக மாற்றிக் கொள்ளவும். MS-word 2003ல் File->Send to->Powerpoint தேர்ந்தெடுக்கவும். MS-word 2007 என்றால் அதை சேவ் செய்து விட்டு க்ளோஸ் செய்யவும். பிறகு 2007 பவர்பாய்ண்டில் அந்த ஃபைலை திறந்தால் போதும்.

அடுத்து Ms-Excel.
எக்சல் ஒரு பெரிய கடல். இது அலுவலக, கல்வி, ஆராய்ச்சி போன்ற பல விசயங்களுக்கு பயன்படுகிறது. தமிழில் பல பிளாக்குகலில் எக்சல் டுடோரியல் வருகின்றன. எக்சலில் சில புரோக்ராமிங் மூலம் ஃபிளாஷ் கேம்களை கூட உருவாக்கலாம். இதோ சில.
Archer Game.xls
Batman_Excel.xls
Bike Racing Game.xls
Car Racing Game.xls 
Shooting Game.xls
Tennis Challenge.xls
super_mario_world_excel.xls
Excel Game Golf.xls 


இன்றைக்கு நான் எதையும் சொல்லவில்லை. ஏனெனில் பவர்பாயிண்டில் சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. எக்சலில் நிறைய ட்ரிக்ஸ் உள்ளன. அதற்கு தனி டுடோரியல் தேவை. அதனால் இன்றைக்கு ஒரு புது சாஃப்ட்வேர்:


Dragon NaturallySpeaking 11

முன்னாலேயே சொல்லிடுறேன். இது தமிழுக்கு அல்ல. ஆங்கிலத்திற்கு மட்டுமே. நாம் எழுதுவதை பேசும் சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. அதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதேபோல் நாம் பேச பேச அதை அப்படியே வேர்டில் எழுதும் சாஃப்ட்வேர் இது, இதை இன்ஸ்டால் செய்தவுடன் மைக்ரோஃபோனை இணைத்து அது தரும் பயிற்சியை செய்யுங்கள். மொழியில் Asian English தேர்ந்தெடுங்கள். நீங்கள் பேச பேச உங்கள் மாடுலேசனை அது பதிவு செய்து கொள்ளும். பிறகு வேர்டில் அது தரும் ஷார்ட் கட்டை கிளிக் செய்து மைக்ரோஃபோனில் பேசினால் வேர்டில் (நோட்பேட், வேர்ட்பேடில் கூட) அது தானாக அடித்துக் கொள்ளும். நீங்க டிக்டேசன் பண்ணுங்க அது எழுதும். பிறகு ஏதேனும் மாற்ற வேண்டியிருந்தால் மாற்றிக் கொள்ளலாம். டைப் பண்ண கஷ்டப்படுவர்களுக்கு இது பயன்படும். வெளிநாடுகளில் குற்றவாளிகள் சொல்வதை அப்படியே சட்டரீதியான கோப்புகளாக மாற்ற இந்த மென்பொருளை பயன்படுத்துவார்கள். பல வேலைகளுக்கு இது பயன்படும்.

டோரண்ட் லிங்க் Nuance_Dragon_Naturally_Speaking_v10.1 (1.6 GB)


No comments:

Post a Comment

Thank you for using this blog.