கம்ப்யூட்டர் டிப்ஸ் - புதியவர்களுக்காக –பாகம் 2

கம்ப்யூட்டர்டிப்ஸ் - புதியவர்களுக்காகபாகம் 2


 கணினியின் வளர்ச்சி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கணினிவந்துவிட்டது. இதனால் கணினி பற்றித்தெரிந்துக் கொள்வதற்கான ஆர்வமும் பெருகியுள்ளது. புதியவர்களுக்காக சில கம்ப்யூட்டர்  டிப்ஸ்களை இங்கு பகிர்கிறேன்.


1.   ஒரு ஆவணத்தை(document) தட்டச்சு(type) செய்யும்போது,  அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்கு செல்ல ctrl+home என்ற பொத்தானை அழுத்தவும். அந்த ஆவணத்தின் இறுதிக்கு செல்ல ctrl+end என்ற பொத்தானை அழுத்தவும்.
     2.   ஒரு வரியின் தொடக்கத்திற்க்கு home என்ற பொத்தானை அழுத்தவும்.
3.   ஒரு வரியின் இறுதிக்கு end என்ற பொத்தானை அழுத்தவும்.

4.   ஒரு சொல் அளவுக்கு வலது புறம் ctrl+right arrow என்ற பொத்தானை அழுத்தவும். ஒரு சொல் அளவுக்கு இடது புறம் ctrl+left arrow என்ற பொத்தானை அழுத்தவும். 
5.   எந்த ஒரு ஆவணத்தையும் சேமிப்பதற்க்கு ctrl+s என்ற பொத்தானை அழுத்தவும்.
6.   எந்த ஒரு ஆவணத்தையும் திறப்பதற்க்கு ctrl+o  என்ற பொத்தானை அழுத்தவும்
7.   My computer திறப்பதற்க்கு என்ற winkey+e என்ற பொத்தானை அழுத்தவும்
8.   எந்த ஒரு ஆவணம் அல்லது Application-ஐ மூடalt+f4 என்ற பொத்தானை அழுத்தவும்.
9.   Run-திறக்க winkey+R என்ற பொத்தானை அழுத்தவும்.
10. உங்களது கணினியில் தேவை இல்லாத file-களை அழிக்க run-ல்
%temp% என டைப் செய்து Enter விசையை அழுத்தவும். பின்னர் window- ல் தோன்றும் file-களை அனைத்து அழித்து விடவும்.

11. இதைபோல், Run-ல் prefetch என டைப் செய்து Enter விசையை அழுத்தவும். பின்னர் window- ல் தோன்றும் file-களை அனைத்து அழித்து விடவும்.

No comments:

Post a Comment

Thank you for using this blog.