Watch Youtube streaming in Slow Internet Speed

மிகமிக மெதுவான இணைப்பிலும் Youtube காணொளிகளை காணுங்கள் – Watch Youtube streaming in Slow Internet Speed

அனைவருக்கும் Youtube இல் காணொளிகளை காண வேண்டும் என்று ஆசை. ஆனால் பல சமயங்களில் அது நிறைவேறுவதில்லை.பொதுவாக YouTube homeஇரவில் தான் நேரம் கிடைக்கும் ஆனால் இந்நேரம் இணைய இணைப்பு வேகத்தில் சுருங்கி விடும்.அடுத்தது  coverage பிரச்சனை. Network   Receiver, Busy என்றால் tower தானாகவே coverage தூரத்தை  குறைந்து கொள்ளும். இப்படி பல பிரச்சனைகள். ஆனாலும் youtubeஇல் பல தரமான காணொளிகள் , திரைப்படங்கள் என பல உண்டு. இவற்றை எப்படி பார்ப்பது என்று பார்ப்போம்.
இதில் எந்த புதுமையும் இல்லை. வழக்கமாக நாம் கையடக்க தொலைபேசிகளில் பார்க்கும் முறையை கணணியில் பிரயோக்கிக்க போகிறோம். அவ்வளவுதான். இது மிக இலகுவான முறை.

இதன் நம்மைகள் என்ன?

  1. மிக மிக மெதுவான இணைப்பிலும் தொடர் அறா நிலையில் காண முடியும் . 10 KBps என்ற அளவு போதும்.
  2. data பாவனையும் குறைவு.

இதன் குறைகள் என்ன?

  • காணொளி தரம் குறைவானது
  • 3D, HD இவற்றை எதிர் பார்க்க முடியாது.
  • Mono sound
  • இதற்கு விசேடமாக ஒரு மென்பொருளை தரவிறக்க வேண்டி உள்ளது.
என்ன குறைகள் இருந்தாலும் streaming  இடையூறு இன்றி கிடைப்பதால் இதை விரும்பலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

  1. RealPlayer  என்ற மென்பொருளை இங்கே தரவிறக்கி நிறுவுங்கள் . ஏற்கனவே இருந்தால் தேவை இல்லை.
  2. அடுத்து  m.youtube.com இந்த இணைப்புக்கு விஜயம் செய்யுங்கள்.
  3. விரும்பிய காணொளியை தெரிவு செய்து Watch  Now என்பதை தெரிவு செய்யுங்கள்.
  4. தானாகவே RealPlayer இயங்கி தொடர்ந்து இடையூறு இல்லாமல் காட்சிகள் நகர ஆரம்பிக்கும்.
பொதுவாக mobile இல் காணொளி பார்ப்பது பற்றி அறிந்து இருப்பீர்கள். ஆனால்  இதுவே கணணியில் இயங்குவதில்லை. காரணம். rstp என்ற protocal மூலமே இது தொலைபேசியில் சாத்தியமாகிறது. பொதுவாக இந்த  protocal லை VLC media player நன்றாக கையாளும். ஆனாலும் இது youtube உடன் இயங்க சிரமப்படுகிறது. அதனால் தான் real player  தேவைப்படுகிறது.
இனி நீங்களும் கணணியில் youtube திரைப்படங்களை காணுங்கள். இது தொடர்பான சில இடைமுகங்கள் இதோ::

** Windows 8 வந்து விட்டது. நன்றாக இருக்கிறது. நீங்களும் மாற வேண்டிய தருணம் விரைவில் வரும்.. நிறுவுவது தொடர்பான விளக்கங்களை இங்கே விரைவில் காணலாம்.

பயாஸை பற்றிய சில உண்மைகள்………………

பயாஸை பற்றிய சில உண்மைகள்………………

150443_478270622244406_1782889504_nபயாஸ் (BIOS)என்றால் என்ன?
Basic input output System என்பதையே சுருக்கமாக பயாஸ்(BIOS) என அழைக்கின்றனர். பொதுவாக ஒவ்வொரு கணினியும் இயங்கஆரம்பிக்கும்போது முதலில் அதனுடைய அனைத்து உள்உறுப்புகளின் திறன் அதன் தற்போதைய நிலை போன்றவற்றை தனக்குதானே சரிபார்த்துக் கொள்ளும்.இச்செயலை Power on Self & Test என்றும் சுருக்கமாக Post என அழைப்பர். பின்னர் கணினியில் கருமையான திரை ஒன்று தோன்றி கணினியின் பாகங்களான தாய்ப்பலகை (Mother board),நினைவகம்(Memory) ஆகியவற்றை பற்றிய மிகமுக்கிய அத்தியாவசியமான தகவல்களை திரையில் காண்பிக்கும். இந்த சமயத்தில் விசைப்பலகையில் Del அல்லது F2 விசையை தட்டினால் பயாஸ் அமைப்பு நீலவண்ணத்திரையாக மாற்றி காண்பிக்கும், இந்த பயாஸ்(BIOS)தான் கணினி இயக்கத்தின் போது வன்பொருளை (hardware) மென் பொருளுடன் (Software) ஒத்தியங்குகிறதா என ஒப்பிட்டுபார்த்து சரியாக இருந்தால் மட்டும் இயக்கமுறைமையை(Operating System) இயக்க அனுமதிக்கும்.இதனை மேம்படுத்தி நிகழ் நிலைப்படுத்தும் (upgradable) மென் பொருட்களை இதில் முன் கூட்டியே அதன் உற்பத்தியாளர்களால் நிறுவப்பட்டுள்ளன.
ஒரு கணிப் பொறி இயங்குவதற்கு முன்பு இந்த பயாஸ் ஆனதுஅதில் ஒரு இயக்க முறைமையை (Operating System (OS)) இயங்குவதற்கு வேண்டிய ஒரு சில அடிப்படை செயல்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்கிறது. இந்த ஆரம்ப பணிகளை இயக்கமுறைமையானது(Operating System (OS)) தானாக செய்து கொள்ளாது Post செயல்,சவுன்கார்டு, USB வழித்தடம், நுழைவாயில் (Ports) ,கட்டுப்பாடுகள் (Control), தரவுகளை தேக்கும்சாதணங்கள் (Storage Device) போன்றவைகள் ஒரு கணினியில் சரியான நிலையில் இருக்கிறதா என பயாஸானது முதலில் பரிசோதிக்கிறது. இந்த அடிப்படை பணிமுடிந்து இவைகளனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே இயக்கமுறைமையை(Operating System (OS)) இயங்க பயாஸ்அனுமதிக்கிறது
1. காத்திருமுறைமை (Standby mode)
நம்முடைய கணினி இயக்கத்தின் காத்திருமுறைமையை மூன்று நிலைகளில் பராமரிக்கலாம் S0 என்பது செயல்படும் சாளர குழல் ஆகும் S1 மற்றும் S3 ஆகியவை மின்சேமிப்பு நிலையாகும், இயல்பு நிலையில் பயாஸ் ஆனதுS1 நிலையில் இருக்கும்படி அமைத்திருப்பார்கள் இந்த நிலையில் கணினி செயல்படும் வேகம் S3 யை விட அதிகமாகும் ஆனால் S3யை விட 50% மின்சாரம் அதிகமாக பயன்படுத்திக் கொள்ளும்.
இந்த S3 நிலையில் செயல்படவேண்டிய முக்கிய பதிவேடுகளின் இயக்கத்தை தற்காலிமாக நிறுத்திவைக்கிறது அதனால் குறைந்த அளவு மின்சாரமே உபயோகபடுதப்படுகிறது.
ஆனால் இந்த S3 நிலைக்கு உங்கள் கணினியை மாற்றுவதற்கு விரும்பினால் அதற்கு முன்பு உங்கள் தாய்ப்பலகை (Mother board) இந்த நிலையை கையாளும் தன்மையுடையதாக இருக்கிறதாவென பரிசோதித்து பார்க்கவும் அவ்வாறு இல்லையெனில் S1 நிலையையே தொடர்ந்து பராமரிக்கவும்.
2. வேகமான தொடக்க இயக்கம் (Faster Booting)
கணினியின் தொடக்கஇயக்கத்தின்போது உள்ளுறுப்புகளை, இயக்ககங்களை((Drives) பரிசோதித்து நினைவகத்தில் ஏற்றும் செயல்களை தாண்டிசெல்லும் ( By Pass) அமைப்பை இயலும் (Enabled) என அமைப்பதன் மூலம் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
3. வளங்களை திறனுடன் பயன்படுத்துதல் (Effective usage of Resources)
தாய்ப்பலகையுடன் (Mother board) கூடுதலான இயக்கக கட்டுப்பாடுகளை (Drive controller) அமைப்பதன் மூலம் S-ATA, P-ATA போன்ற நுழைவு வாய்ப்புகள் அமைக்கப்பட்டு கூடுதலான பயன் கிடைக்கும்படி செய்யப்படுகிறது,
இந்த கூடுதல் வசதி தேவையில்லையெனில் இதனை பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு.இவைகளின் இணைப்பை துண்டிக்கச் செய்வது நல்லது அதனால் தொடக்க காத்திருப்பு நேரம் குறைவதற்கு வாய்ப்புள்ளது.
4. கணினியை தானாக தொடங்க செய்வது (Starting PC Automatically)
ஒரு கடிகாரத்தில் அலாரம் அடிப்பதற்கான நேரத்தை அமைத்து விடியற்காலையில் நாம் கண்விழித்தெழுவதை போன்று கணினியும் மீண்டும் எப்போது இயங்கத் தொடங்க வேண்டும் என நேரம் அமைத்துவிட்டால் தானாகவே கணினியானது குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கத் தொடங்கும் இது Stand by mode லிருந்து தொடங்குவது அன்று கணினி இயக்கத்தை நிறுத்திய பிறகும் தானாகவே இயங்கத் தொடங்குவதுஆகும் என்பதை மனதில்கொள்ளுங்கள்,
5. வளாக இணைப்பு பரிசோதிப்பை இயங்காதிருக்க செய்தல் (Deactivating LAN Check)
சில கணினிகள் இணைய இணைப்பு மற்றும் வளாக இணைப்புடன் இருக்கும் அந்த நிலையில் கணினி இயங்க தொடங்குபோது இணைய இணைப்பு வளாக இணைப்பு ஆகியவற்றின் சாதனங்கள் அதற்கான வாயில்களுடன் மிகச்சரியாக பொறுத்தப்பட்டுள்ளதா என பரிசோதிக்கும் சரியாக இல்லையெனில் அடுத்த செயலுக்கான கட்டளை வரும்வரை அப்படியே இயங்காமல் காத்திருக்கும் இந்த இணைப்புகள் இல்லாத நிலையில் இதற்கான சாதனங்களை பரிசோதிக்கும் செயலை இயங்காதிருக்க(Deactive) செய்வது நல்லது.
6. தொடக்க வரிசைகிரமத்தை போதுமானதாக செய்க (Boot Sequence optimization)
பயாஸ் ஆனது வன்தட்டு (Hard Disc)நெகிழ்வடடு Floby Disc குறுவட்டு CD or DVD அல்லது வலை இணைப்பு Net work போன்ற எந்த இயக்ககத்திலிருந்து வேணடுமானாலும் தொடங்கும்படியான வாய்ப்பை அறவே நீக்கிவிடுக, அதற்குபதிலாக Hard Disc முதலிலும் அதன்பிறகு CD or DVD யும் அதன்பிறகே Net work லும் என்றவாறான வரிசைகிரமத்தில் இயங்க தொடங்க வேண்டும் என அமைத்து கால விரையத்தை தவிர்த்திடுங்கள்
7. வன்தட்டு இயக்ககததை அமைவு செய்தல் (Configuare S-ATA hard drives)
புதிய தாய்ப்பலகை (Mother board)கள் ஒரு S-ATA வை ஆதரித்தால் மட்டும S-ATA வன்தட்டு இயக்கக அமைவை பயன்படுத்தலாம். இதில் மூன்று வகையான இயக்க முறைகள் உள்ளன,
1. IDE யின் நிலை (இது முந்தைய P-ATA வுக்கானது).
2. உயர்திறன் AHC1 நிலை (இது இரண்டாவது தலைமுறை S-ATA வுக்கானது.)
3. மிக வேகமான பாதுகாப்பான RAID தொழில்நுட்ப நிலை.
பொதுவாக புதிய கணினிகளில் உள்ள இயல்புநிலை IDE யை இதனுடைய திறன் ஒரு பொருட்டாக இல்லையெனினும் அப்படியே விட்டுவிடுவது நல்லது. ஆயினும் இரண்டு வன்தட்டுகளை (Hard Drive) பயன்படுத்துவதால் RAID 0 தொழிலநுட்ப நிலை.யை பயன்படுத்துவது நல்லது. தரவுகள் இரண்டுஇடங்களில் பராமரிக்கவேண்டுமெனில் RAID 1 ஐ பயன்படுத்துங்கள். ஆயினும் சாளரத்தை நிறுவுமுன் உற்பத்தியாளரால் வழங்கப்பட்ட தாய்ப்பலகை (Mother board)இயக்ககத்தை நிறுவுக.
8. ஆபத்து நிலையில் பயாஸிற்கு புகலிடம். (Resort to BIOS for rescue)
கணினியில்உள்ள வன்பொருளின் உறுப்புகளில் அதிகப்படியான மாறுதல் ஏதேனும் செய்திருந்தால் பயாஸ் ஆனது கணினியின் தொடக்கத்தை மறுத்து (தடுத்து) நிறுத்திவிடும். இவ்வாறான நேரத்தில் உடனடியாக கணினிக்கு வரும் மின் தொடர்பை துண்டித்துவிடுங்கள். பின்னர் மின்தொடர்பிற்கு உதவும் மின்கம்பியை பொருத்துவாயிலிருந்து கழட்டிவிடுங்கள். தட்டையான வட்டவடிவமான மையசெயலகத்தின் மின்கலண்களை (CPU Cell) கழட்டி 60 செகண்டு கழித்து மீண்டும் பொறுத்துக. இவ்வாறு செய்வதால் பயாஸ் அமைவை இயல்பு நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும்.
9. மையசெயலகத்தின் சுழற்சி இயக்கத்தை தானாகவே ஒழுங்குபடுத்துதல்(Automatic Regulation of the CPU Cycle)
Intel and AMD ஆல் உருவாக்கப்பட்ட தாய்ப்பலகையின்((motherboard) கடிகார வேகத்தை மையசெயலகம் ஆனது சும்மா இருக்கும் நிலையில் குறைத்து அமைப்பது மையசெயலகத்தின் மின்நுகர்வும், வெப்ப உற்பத்தியும் குறைத்துவிடும். அதனால் குறைந்த அளவு மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும்,, இதற்காக AMD தாய்ப்பலகை (Mother board)எனில் Auto என்றும் Intel தாய்ப்பலகை (Mother board)எனில் enabled என்றும் அமைத்திடுக்.
10. மையசெயலகத்தின் (CPU) இயக்கத்தை நாமே அமைக்கலாம்,
மையசெயலகத்தின் (CPU) கடிகார வேகத்தின் பெருக்குதல் காரணியை 9லிருந்து 6 ஆக குறைத்தால் (உதாரணமாக இண்டல் கோர் 2Duo & 4300 ஆனது 200Mzhs x 9 =1800 Mzhs என இருப்பதை 6 ஆக குறைப்பது) வேகத்தை பத்து சதவிகிதம் மட்டும் கூடுதலாக செய்து. பெருக்குதல் காரணியான FSB யை கூடுதலாக்காமலேயே குறைந்த கடிகார வேகத்தில் இயங்கும்படியும் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும்படியும் மாற்றியமைக்க முடியும். ஆயினும் தானியங்கு அமைப்பை அப்படியே விட்டுவிடுவது மிகப்பாதுகாப்பானது.
11. மின்விசிறியை தானாக இயங்குமாறு அமைத்தல்(Automatic Regulated Fans)
மையசெயலகத்தில் (CPU) ஏற்படும் வெப்பத்தை தணிப்பதற்கான மினிவிசிறியை Enable அல்லது Auto என தக்கவாறு அமைப்பது நல்லது. சில மையசெயலகத்துடன் (CPU) இருக்கும் மினிவிசிறிகளின் இயங்கு திறனை (Performance ) 1முழுதிறனுடன் (full Performance ) அதிக வேகத்துடன் இயங்குவது, 2 போதுமான அளவிற்கு மட்டும் இயங்குவது(Optimization) 3 குறைந்த அளவு மட்டும் இயங்குவது (Silent) என மூன்று வாய்ப்புகளில் வைத்திருப்பார்கள். நாம் விரும்பியவாறு மையசெயலகத்தினுடையCPU விசிறியின் வேகத்தை மாற்றி அமைக்கலாம். எச்சரிக்கை நாம் எந்த வாய்ப்பை தோர்ந்தெடுக்கின்றோமோ அதற்கேற்றவாறு மின் நுகர்வும் இருக்கும்.
12. நினைவகத்தை அதிவேகமாக்குதல்(Memory Over Clocking)
RAM நினைவகத்தை போதுமான அளவு நினைவக கட்டுப்பாடு பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக சில உள்ளுறை சுனக்க மதிப்பை (Latency value) பராமரிக்க வேண்டும். இவைகள் சாதாரணமாக நெடுவரிசையின் முகவரிநேர சமிக்சையை (Column Address Stroke சுருக்கமாக CAS) கடிகார இயக்க சுழற்சியில் குறிப்பிடுவார்கள். இந்த சமயத்தில் உண்மையில RAM Latency யை தாய்ப்பலகையானது (Mother board) பயன்படுத்திகொள்ளாது. உதாரணமாக RAM on Latency WWW-12 என்பது 555-15 என இயல்பு நிலையில் தாய்ப்பலகை (Mother board) ஆதரிக்கும்.
இதனை நாமே நினைவக கடிகார வேகத்தை உண்மை நிலையைவிட குறைவாக அமைப்பது RAM ன் திறனை உயர்த்த உதவுகிறது. அதிகபட்சமாக ஒவ்வொன்றும் ஒரு கடிகார சுற்று அளவிற்கு குறையாமல்இருந்தால் நல்லது. இதனை ஒரு தாய்ப்பலகை (Mother board) ஏற்றுக்கொண்டால் கணினி இயங்க ஆரம்பிக்கும். இல்லையெனில் BIOS-ல் இதனை மறு அமைவு செய்ய வேண்டும். சாளரத்தில் (Window) இதன் மதிப்பை பரிசோதிக்க CPU-3 என்ற கருவியை பயன்படுத்தி கொள்ளவும்.
13. கடிகார சுற்று பொது(Clock Gen)
இதனை இயலுமை (Enable) செய்வதால் பயனாளர் மையசெயலகத்தின் (CPU) கடிகார வேகத்தை PLLControl வாய்ப்பிலிருந்து FSB மற்றும் RAM துணையுடன் மாற்றி அமைக்க முடியும். ஆனால் இது சிறிது ஆபத்தானது எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

இப்படியும் உங்கள் PASSWORDஐ திருடப்படலாம்

இப்படியும் உங்கள் PASSWORDஐ திருடப்படலாம்

நண்பர்களே இனிய புத்தாண்டில் ஒரு புதுமையான தகவலுடன் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி அதே நேரத்தில் சில அதிர்ச்சியான செய்தியை கேள்விப்பட்டேன் அதை கண்டதும் எனக்கு மிகவும் வருத்தமும் கோபமும் தான் வந்தது .நீங்கள் பலமுறை browsing centre சென்று இருக்கலாம் .அங்கே நமது password ஐ எப்படி அவர்கள் திருட்டுத்தனமாக பயன்படுத்கிறார்கள் என்பதை நான் கண்டறிந்தேன் .இன்று அதிகம் பயன்படுத்தப்படும் browser அது நிச்சயமாக mozila firefox ஆகதான் இருக்கமுடியும்.நீங்கள் yahoo,google என்று பல்வேறான வலைப்பக்கத்தில் நீங்கள் பயனாளராக இருக்கலாம்.அதன் குறியீட்டு என்னை எப்படி திருடப்படுகிறார்கள் என்பதை நான் சொல்லபோகிறேன் . mozila firefox யின் tool சென்று option ->security->saved passwords என்பதினை பார்க்கும்போது அதில் நாம் பயன்படுத்தப்பட்ட…

பாதுகாப்பற்ற கம்பியூட்டர்கள் தொடர்பில் மைக்ரோசொப்ட் எச்சரிக்கை!

பாதுகாப்பற்ற கம்பியூட்டர்கள் தொடர்பில் மைக்ரோசொப்ட் எச்சரிக்கை!

windows-100x100
பன்னாடெங்கும் இயங்கும் கம்ப்யூட்டர்களில், நான்கில் ஒன்று பாதுகாப்பற்ற நிலையில் இயங்குவதாகவும், இவற்றில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குவது மிக எளிதான ஒன்றாகும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பு குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்திட, செக்யூரிட்டி இன்டலிஜென்ஸ் அமைப்பு ஒன்றை இயக்கி வருகிறது. இதன் சமீபத்திய அறிக்கை இந்த அதிர்ச்சி தரும் தகவல்களைத் தந்துள்ளது.
பன்னாடெங்கும் உள்ள கம்ப்யூட்டர்களில், 24 சதவீத கம்ப்யூட்டர்கள், அப்டேட் செய்யப்படாத ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களைக் கொண்டு, ஆபத்தான சூழ்நிலையில் இயங்கி வருகின்றன. இவை மற்றவற்றைக் காட்டிலும் 5.5 மடங்கு அதிக ஆபத்துக்களை வரவேற்கும் தன்மையுடையன.
இந்தியாவில் இயங்கும் கம்ப்யூட்டர்களில், 30 சதவீதம் பாதுகாப்பற்ற தன்மையைக் கொண்டுள்ளன. எகிப்தில் 40%, அமெரிக்காவில் 26%, கனடாவில் 23%, பிரிட்டனில் 21% மற்றும் ரஷ்யாவில் 29 சதவீதம் என இந்த அறிக்கை, பாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையைக் காட்டியுள்ளது.
சில போலியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் குறித்தும் மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது. கம்ப்யூட்டர்களை முழுமையாக இலவசமாக ஸ்கேன் செய்து தருவதாக, விளம்பரம் செய்திடும் இவை, ஸ்கேன் செய்த பின்னர், அதிக வைரஸ் இருப்பதாகவும், தொடர்ந்து பாதுகாப்பு தர பணம் செலுத்த வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றன.
பணம் செலுத்த மறுத்தால், நம் கம்ப்யூட்டர்களின் இயக்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்று, நம்மைப் பயமுறுத்துகின்றன. இந்த வகையில் சென்ற ஆண்டு, என்னும் போலியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்று, 30 லட்சம் கம்ப்யூட்டர்களில் புகுந்து ஆட்டிப் படைத்தது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பணம் செலுத்தி வாங்க இயலாதவர்களுக்கு, Microsoft Security Essentials என்னும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை இலவசமாக வழங்கி வருவதனையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இணைய உலகில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்

ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இணைய உலகில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்

முதன் முதலில் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட இன்டர்நெட் அதன் அபரிமிதமான வளர்ச்சியால் தற்பொழுது குக் கிராமங்களில் கூட இந்த வசதியை பயன்படுத்துகின்றனர். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தற்பொழுது இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அது கல்விக்காக இருக்கலாம் அல்லது தொழில் சம்பந்தமாக இருக்கலாம் அல்லது சமூக தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க இப்படி பல வழிகளில் இணையம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இப்படி பலருக்கு உதவ பல தளங்கள் இன்டர்நெட்டில் உள்ளது. இந்த இணைய உலகில் ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே தொடருங்கள்.
  • 168 மில்லியன் மெயில்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படுகிறது.
  • 1500+ புதிய பதிவுகள் வெளியிடப்படுகின்றன. மற்றும் 60+ புதிய பிளாக்குகள் துவக்கப்படுகின்றன.
  • 694,445 தேடல்கள் கூகுள் தேடியந்திரத்தில் நிகழ்கிறது.
  • 70+ புதிய டொமைன் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன.
  • 695,000+ புதிய அப்டேட்கள் பேஸ்புக்கில் பகிரப்படுகிறந்து.மற்றும் 510,040 புதிய கமெண்ட்டுகள் பேஸ்புக்கில் போடப்படுகிறது.
  • 98,000 புதிய Tweets ட்விட்டரில் பகிரப்படுகிறது மற்றும் 320+ புதிய அக்கௌன்ட்டுகள் ட்விட்டரில் பதிவு செய்யப்படுகிறது.
  • யூடியூபில் 600+ புதிய வீடியோக்கள் பகிரப்படுகிறது மற்றும் 25+ மணி நேரம் வாசகர்களால் செலவழிக்கப்படுகிறது.
  • 1700+ பயர்பாக்ஸ் உலவி டவுன்லோட் செய்யப்படுகிறது.
  • ஸ்கைப்பில் 370,000 நிமிடங்கள் பேசப்படுகிறது.
மேலும் விவரங்கள் அறிய மேலே உள்ள படத்தில் கிளிக் செய்து பெரிது படுத்தி பாருங்கள் தெரியும்.

அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்

அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்

கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான டாக்குமெண்ட்களை கையாளுவோம், ஒரு சில பைல் பாமெட் கொண்ட் பைல்களையே அதிகமாக பயன்படுத்துவோம் குறிப்பாக வேர்ட், பிடிஎப், ஆடியோ பைல்கள், வீடியோ பைல்கள் இதுபோன்ற பைல் பார்மெட்களை தான் நாம் அதிகமாக பயன்படுத்தி வருவோம். இதுபோல் அதிகமாக பயன்படுத்தும் பைல் பார்மெட்களுக்கென மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். ஆனால் ஒரு சில பைல்களை அவ்வபோது குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருவோம். அதுபோன்ற பைல்களை காண வேண்டுமெனில் அதற்கென உரிய மென்பொருளை நிறுவினால் மட்டுமே அந்த குறிப்பிட்ட பைலை நம்மால் காண முடியும். இதனால் ஒரு சில டாக்குமெண் ட்களை நம்மால் காண முடியாமலேயே போய்விட கூடிய சூழ்நிலையும் உண்டு. இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக பல்வேறு விதமான பைல் பார்மெட் கொண்ட பைல்களை காண முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
imgres
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்யவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த பைலினை ஒப்பன் செய்ய வேண்டுமோ அதனை திறந்து பார்க்கவும். இந்த மென்பொருளானது பல்வேறு விதமான பைல் பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த மென்பொருளின் உதவியுடன் 75கும் மேற்பட்ட பைல்பார்மெட்களை ஒப்பன் செய்ய முடியும்.

PDF, DOC, AVI, DOCX, ZIP, JAR, XML, HTML, SWF, 7Z, PHP, XLSX, MKV, FLV, XLS, JPEG, TXT, PSD, WMV, CR2, CRW, GIF, MSG, NEF, TIFF, JPG, MOV, MP4, LOG, PNG, CS, INI, MPEG, MPG, CSS, MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG, DNG, ARW, MID, ORF, RAF, PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2, X3F இதுபோல இன்னும் பல பைல் பார்மெட்களை இந்த மென்பொருளானது சப்போர்ட் செய்யும்.  மேலும் இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய பைல் பார்மெட்களை காண சுட்டி.

இணையம் எவ்வாறு இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு

இணையம் எவ்வாறு இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு

எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கணணியில் உள்ள தகவலை, சினிமா பாடலை, விளையாட்டை எப்படி இணையம் நம் கணணிக்கு கொண்டு வருகிறது? என்ற கேள்வி இணையத்தைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும்.
தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கணணியை இணையம் மூலம் தகவல்கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.
கணணியை இயக்கி இணைய இணைப்பை உயிர்ப்பித்து உலவியின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். உலவி எதுவாக வேண்டுமானாலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மோஸில்லா பயர்பொக்ஸ், சபாரி, கிரேஸி பிரவுசர், பிளாக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இதனை கிளையண்ட்(Client) என அழைக்கிறோம். தற்போதைக்கு வாடிக்கையாளர் என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன இணையத்தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இணைய இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது.
அந்த சர்வர் தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியே அனுப்புகிறது. ஐ.எஸ்.பி சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் “வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்� என்னும் அதிவேக வழியில் செல்கிறது.
இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை உபசரிப்பவர் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது.
நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கணணிக்கு அனுப்புகிறது. நாம் ஒரு இணையத்தளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கணணிக்குத் தெரியாதே? எனவே தான் கணணிகள் அறிந்து புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது.
இதற்கு புரோட்டோகால் என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட்டோகால் என்பது இரண்டு கணணிகள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி., மற்றும் வை-பி (TCPIP, HTTP, FTP, SMTP WiFi) எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி – ஐ.பி. பயன்படுத்துவதால் அது குறித்து காண்போம்.
இணையத்தில் இணைக்கப்படும் ஒவ்வோரு கணணிக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 லிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட்டாக www.yahoo.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும்.
இது இதன் நிலையான எண். உங்கள் கணணி இணையத்தில் இணையும் போது உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இணையத்தில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது.
முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஒரு ஐ.எஸ்.பி. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கணணிகளை இணையத்தில் இணைக்க வேண்டியுள்ளதால் அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன.
இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது.
ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இணையத்தில் எந்த கணணி வேண்டுகோளை வைத்தது, எந்த கணணியிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். டி.சி.பி. (Transmission Control Protocol) என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின் செயல்பாடு.
ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.
http www globe

அடுத்த 20 ஆண்டுகளுக்கு விண்டோஸ் 8 மட்டுமே

அடுத்த 20 ஆண்டுகளுக்கு விண்டோஸ் 8 மட்டுமே

“”விண்டோஸ் 8 ஒரு நிறுவனத்தின் முயற்சியால் விளைந்த படைப்பு அல்ல. 20 ஆண்டுகளுக்கு கம்ப்யூட்டர் இயக்கத்தைத் தாங்கிப் பிடிக்கும் கட்டமைப்பு” என மைக்ரோசாப்ட் நிறுவன முதலீட்டாளர்களின் நட்புப் பிரிவின் தலைவர் பில் கோபெட் அறிவித்துள்ளார்.
இது விண்டோஸ் 8 தொகுப்பினைச் சந்தைப்படுத்துவதற்காக சொல்லப்பட்ட கூற்று அல்ல. கம்ப்யூட்டர் பயனாளர்களை மையப்படுத்திச் செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எதிர்காலக் கணிப்பாகும். 2014 ஏப்ரல் மாதம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான சப்போர்ட்டை நிறுத்திவிடும்போது, எக்ஸ்பி பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும் (தற்போது 42%) தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மாற்றியே ஆக வேண்டும். அவர்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்தினை விரும்பவில்லை என்றால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்காகவது மாறுவார்கள். அப்படியானால், விண்டோஸ் 8 சிஸ்டத்தினை யார் விரும்புவார்கள்?
ஐபோன், ஆண்ட்ராய்ட் போன் மற்றும் ஐபேட் பக்கம் சென்ற நிறுவன வாடிக்கையாளர்கள், பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி என அனைத்தையும் ஒருங்கே அணைத்துச் செல்லக் கூடிய, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத்தான் மாறுவார்கள் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.
அதுமட்டுமின்றி, கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பயனாளர்கள், டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தினை விரும்பிப் பயன்படுத்துவார்கள் என்றும் மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. அதனால் தான், எதிர்ப்பு தோன்றிய போதும், ஸ்டார்ட் ஸ்கிரீன் இல்லாத யூசர் இன்டர்பேஸை கட்டாயப்படுத்துகிறது. பல புரோகிராம் டெவலப்பர்கள், தொடுதிரை வழி இயங்கும் வகையிலேயே தங்கள் புரோகிராம்களை அமைக்க, விண்டோஸ் 8 தொடுதிரை இயக்கம் கை கொடுக்கும். ஏனென்றால், ஸ்மார்ட் போன்களில் தொடுதிரை இயக்கம் தான் இன்றைய நிலையில் வழக்கமான ஒன்றாக மாறி உள்ளது. இதனையே இனி அனைவரும் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பிசிக்களில் எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு விண்டோஸ் 8 சிஸ்டம் மட்டுமே கை கொடுக்கும்.
எனவே, மைக்ரோசாப்ட் பழைய டெஸ்க்டாப் பழக்கத்திற்கு வழி விட்டால், தொடுதிரைப் பழக்கம் கம்ப்யூட்டரில் வராமலேயே இருந்துவிடும். புரோகிராம் அமைக்கும் தர்ட் பார்ட்டி டெவலப்பர்களும், தொடுதிரை இயக்கம் பக்கம் செல்ல மாட்டார்கள். இது அவர்களுக்கும், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் பெரிய மரண அடியாக இருக்கும். எனவே தான், சாதுர்யமாக, விண்டோஸ் 8ல் தரும் தொடுதிரை யூசர் இன்டர்பேஸினை மைக்ரோசாப்ட் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
எனவே விண்டோஸ் தொடர்ந்து மக்களுடன் உறவாட, தொடுதிரை யூசர் இன்டர்பேஸ் நல்ல அடிப்படையை அமைக்கும். முதலில் டெவலப்பர்களுக்கு, விண்டோஸ் 8 சிஸ்டம் தொகுப்பினை வழங்குகையில், மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாகி ஸ்டீவ் பால்மர் இதனைத்தான் தெரிவித்தார். உலகில் ஆண்டுக்கு 40 கோடி கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் 26 கோடி கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் இயங்கும். இவற்றுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை டெவலப்பர்கள் உருவாக்குவது நல்ல விற்பனையைத் தரும் என்று கூறினார். இந்த வகையில் டெவலப்பர்களைத் தன் வசம் இழுத்துக் கொண்ட மைக்ரோசாப்ட், இவர்கள் வழியாக நுகர்வோர்கள் நிச்சயம் தங்கள் பக்கம் வருவார்கள் என்பதில் உறுதியாக உள்ளது.
தொடுதிரை இயக்கத்தின் அடுத்த பதிப்பு வரும்போது, நிச்சயம் பெரும்பாலான நுகர்வோர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தினை அதன் தொடுதிரையுடன் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. அந்த வகையில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்காவது, விண்டோஸ் 8 நிலைத்து நிற்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது.
ஆனால், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் வேறு வழியில் சிந்தித்துக் கொண்டிருக்கலாம். இனிமேல் தான் அது தெரியவரும்.

 Windows-8-500

அனைவருக்கும் ஆண்டவரானது கூகுள்!

அனைவருக்கும் ஆண்டவரானது கூகுள்!

goo-300x175
எந்தத் தகவல் வேண்டுமானாலும் உடனடியாக கூகுள் ஆண்டவரை கேளுங்கள் என்று விளையாட்டாகச் சொல்லுவார்கள். ஆனால் அது கிட்டத்தட்ட உண்மையாகிறதோ என்று வியக்கும் வண்ணமே அதன் செயல்பாடுகள் அமைகின்றன. இன்று கூகுளில் தகவல் தேடுபவர் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் 15 கோடிப்பேராம். அதில் 40 சதவீதம் பேர் பெண்கள் என்பதும் கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் இரண்டு கோடியே 40 லட்சம் பெண்கள் நாள் தவறாமல் இணைய தளங்களைப் பயன்படுத்துவதும், அதில், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளங்களை மட்டுமில்லாமல் ஆடை, அணிகலன்கள் குறித்தும் தகவல்களை தேடுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து, செய்தியாளர்களை சந்தித்த கூகுள் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவரும், மேலாண் இயக்குனருமான ராஜன் ஆனந்தன், இந்தியாவில் சுமார் 6 கோடி பெண்கள் இணைய சேவையைப் பயன்படுத்தி வருவதாக கூறினார் .
தற்போது, வீடு, அலுவலகங்களில் இணையவசதி எளிமையாக கிடைப்பதாலும், ஸ்மார்ட் போன்களின் பயன்பாடுகள் அதிகரித்திருப்பதாலும், தங்கள் தேவைகளுக்கு பெண்கள் இணையதளங்களை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
பொதுவாக பெண்கள் இணையத்தில், மின்னஞ்சல் பார்ப்பது, சமூக வலைதளங்களில் பொழுதை கழிப்பது, பாடல்களை டவுன்லோட் செய்வது, வீடியோ பார்ப்பது என்று பட்டியலிடுகிறது ஆய்வு.
பெண்களில் யாரெல்லாம் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்றால், அதிக பண வசதியுடையவர்களும், இளையோரும் தானாம்.
என்ன தேடுகிறார்கள்?
கூகுள் தேடுபொறியில் பெண்கள் அப்படி என்னதான் தேடுகிறார்கள் என்று ஆய்வு செய்ததில் ஆடைகள், பொருட்களை அடுத்து, உணவு தயாரிப்பது, குழந்தைகளை பேணுவது, முடியை பரிமரிப்பது , சருமத்தை அழகாக வைத்துக்கொள்வது…. போன்றவற்றைதான் அதிகம் தேடுகிறார்களாம்.
அதுவும் தங்களின் செல்போனில் இருந்து பெண்கள் இத்தகைய கேள்விகளை கூகுள் தேடுபொறியில் கொடுத்து அறிந்துக்கொள்வதாக ஆய்வு கூறுகிறது.
அதுமட்டுமல்லாமல், இவற்றை மற்ற பெண்களிடம் பகிர்ந்து கொள்வதோடு, அந்த பொருட்களை வாங்க அவர்களுக்கு பரிந்துரைப்பதாக 80 விழுக்காடு பெண்கள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்துகொள்வதாக 25 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
என்ன பார்க்கிறார்கள்?
கூகுளின் இந்த ஆய்வு இத்தோடு நில்லாமல், தனது வீடியோ தளமான யுடியூபில் பெண்களின் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்திருக்கிறது. இந்தியாவில் யூடியூபை பயன்படுத்துவோரில், 40 விழுக்காட்டினர் பெண்களாம்.
அதில், இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்பட காட்சிகளை பார்ப்பதை தாண்டி, அழகு, ஃபேஷன், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, வீட்டை அழகாக வைத்து கொள்வது, சமையல் வீடியோக்கள் தான் அதிகமாக பெண்கள் பார்ப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
கூகுள் ஆய்வுகள் ஒருபுறம் இருக்க… தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இணையம் இன்று எல்லோர் உள்ளங்கையிலும் தவழத் தொடங்கிவிட்டது – மாய உலகமான அந்த இணைய உலகம் தனிமனிதனை மட்டுமல்லாது, சமூக மாற்றங்களையும் செய்துள்ளது.
இது அறிவு வளர்ச்சியை நோக்கி இளைய தலைமுறையினரை கொண்டு செல்லும் களமாக இருந்தாலும், இது தவறாகவும், தவறான பயன்பாட்டுக்கும் மடைமாற்றிச் சென்றுவிடக்கூடாது என்ற ஒரு அச்சமும் ஒருபுறம் நிலவவே செய்கிறது.
எனவே பெற்றோர்களும் இணையத்தின் தன்மைகளை அறிந்து தங்கள் குழந்தைகளுக்கு இணையத்தின் சாதக பாதகங்களை கற்றுத்தருதலும், கண்காணிக்கவும் செய்வதும் அவசியம் என்கின்றர் சமூகநல வல்லுனர்கள்.

உலகின் நம்பர் 1 சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்குகின்றது சீனா

உலகின் நம்பர் 1 சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்குகின்றது சீனா

ஜூன் மாதம் வெளியிடப்பட்ட உலகின் முதல் 500 அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரகளின் பட்டியலில் முதலிடத்தை சீனா பெற்றுள்ளதுடன் அதன் வேகம் ஏனைய எந்த ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை விடவும் 2 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகின்றது.
computer
டியான்ஹே-2 எனப் பெயரிடப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர் அதிகாரப் பூர்வமாக உலகின் நமபர் 1 அதிவேக கணிணி என திங்கட்கிழமை பிரகடனப் படுத்தப் பட்டது.
மேலும் இதற்கு முன் நம்பர் 1 இல் இருந்த அமெரிக்காவின் டைட்டன் ஐயும் இது மிஞ்சி விட்டது. உலகளவில் மிகச் சிறந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானிகளைக் கொண்ட ஓர் குழு  ஒவ்வொரு வருடமும் இரண்டு தடவை டாப் 500 அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களின் விபரங்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் சீனாவின் டியான்ஹே-2 கம்ப்யூட்டர் ஒரு செக்கனுக்கு 33.9 பெட்டாஃப்லொப்ஸ் (petaflops)
அதாவது Quadrillions கணிப்புக்களை மேற்கொள்ளக் கூடியது என்றும் இது இப்பட்டியலில் 2 ஆம் இடத்தைப் பிடித்திருக்கும் டைட்டன் ஐ விட இரு மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த டியான்ஹே-2 சூப்பர் கம்ப்யூட்டர் சீனாவின் தேசிய பாதுகாப்புத் தொழிநுட்ப பல்கலைக் கழகத்தால் உருவாக்கப் பட்டதுடன் தென்மேற்கு சீனாவின் குவாங்ஷோ இல் உள்ள சூப்பர் கம்ப்யூட்டர் நிலையத்தில் இவ்வருட இறுதியில் நிறுவப் படவுள்ளது. மேலும் டியான்ஹே-2 விமானங்களுக்கான சிமுலேசன் பரிசோதனைகள், மிகப் பாரிய தகவல்களைக் கையாளுதல், சீன அரசின் பாதுகாப்புக்கு உதவி வழங்குதல் ஆகிய தேவைகளுக்குப் பயன்படுத்தப் படும் என்றும் செய்திகள் தெரிவித்துள்ளன.

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!!!!!

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!!!!!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.
◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —
உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்….

பேஸ்புக்கில் விரைவில் ‘# ………….

பேஸ்புக்கில் விரைவில் ‘# ………….

Facebook-Marketing1பேஸ்புக் மற்றும் டுவிட்டர்  ஆகிய இரண்டும் இணையத்தின் பிரிக்கமுடியாத அங்கங்களாக மாறிவிட்டன.
தகவல் பரிமாற்றத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற இரு ஜாம்பவான்களாக இவற்றைக் குறிப்பிடுவதில் எவருக்கும் ஆட்சேபனை இருக்கப் போவது இல்லை.
குறிப்பாக அரபு வசந்தத்தில் இவற்றின் பங்குகள் அளப்பரியன.  மத்திய கிழக்கில் சில நாடுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இவை பெருந் துணையாக இருந்தன.
பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இரண்டும் பொதுவாக சமூக வலையமைப்புகள் என  வரைவிலக்கணப்படுத்தப்பட்டாலும், மேலெழுந்தவாரியாக ஒரே மாதிரியானதென குறிப்பிடப்பட்டாலும் இவை இரண்டிற்கும் இடையே பல வித்தியாசங்கள் உள்ளன.
இவை இரண்டினதும் நோக்கம் என்னவோ தகவல் பரிமாற்றம், இணையத்தோடு இணைந்திருத்தல்  என தெரிவிக்கப்பட்டாலும் இவை அனைத்தும் ஒவ்வொரு தனிநபர் தகவல்களையும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதையே அடிப்படை நோக்காகக் கொண்டவை என்பது பரவலாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.
பொதுவாக சமூகவலையமைப்புகள், உலாவிகள் ஆகியன பாவனையாளர்களின் தகவல்களை அறுவடைசெய்யும்  ‘Data harvesting’ என்று சொல்லக்கூடிய நமது தகவல்களை நம்மை அறியாமல் திருடும் குழுக்களே என்பது தொழிநுட்ப உலகத்தில் புதிய தகவல் அல்ல.
இவற்றுக்கும் ஒரு படி மேலே சென்ற விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாங்சே பேஸ்புக் மற்றும் டுவிட்டர் அமெரிக்க உளவு நிறுவனங்கள் என பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
மத்தியகிழக்கில் புரட்சி , அமெரிக்க உளவாளிகள் என குற்றஞ்சாட்டப்படும் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இரண்டும் அதில் செலுத்திய தாக்கம் என்பவற்றை தேடி ஆராய முற்பட்டால் ஒருவேளை அசாஞ்சேயின் குற்றச்சாட்டுக்கான விடை கிடைத்தாலும் கிடைக்கலாம்.
ஆனால் தற்போது நாம் தரப்போகும் செய்தி இது தொடர்பானதல்ல இது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இடையே நிலவும் போட்டித் தன்மை தொடர்பானதாகும்.
ஆம், சமீப காலமாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களிடையே போட்டித் தன்மை அதிகரித்து விட்டது.
நாம் ஆரம்பத்தில் கூறியது போல இரண்டும் வெவ்வேறான தளத்தில் பயணித்த போதிலும் இவற்றின் நோக்கம் என்னவோ ஒன்றுதான்.

அது அதிகப்படியானஇலாபத்தினை அடைதலாகும். அதற்கு இவை எந்த அளவுக்கும் செல்லும்.
இது அனைத்து வியாபார நிறுவனங்களினதும் முதற் குறிக்கோளாகும். இதற்கு இவை இரண்டும் கூட விதி விலக்கல்ல.
போட்டி நிலைமைகளை சமாளிக்கும் பொருட்டு பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவை இரண்டும் புதிது புதிதாக பல மாற்றங்களை தமது தளத்தில் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் பேஸ்புக் தற்போது தனது தளத்தில் புதிய மாற்றமொன்றை கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுவும் டுவிட்டரை ஒத்த மாற்றமொன்றை பேஸ்புக் பாவனையாளர்கள் விரைவில் காணலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆம், டுவிட்டரில் பரவலாக உபயோகப்படுத்தப்படும் ‘ஹேஸ்டெக்’ (#)முறை விரைவில் பேஸ்புக்கிலும் பாவனைக்கு வரவுள்ளது.
தனது தளத்திலும் உரையாடல்களை ஊக்குவிக்கும்பொருட்டு இம்முடிவை பேஸ்புக் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக ஒரு விடயம் தொடர்பான ஹேஸ்டெக்கினை கிளிக் செய்வதன் ஊடாக  அது தொடர்பில் மற்றையோரின் கருத்து என்ன என்பதனை  தொடர்பில் அறிந்துகொள்ளமுடியும்.
இதன்மூலம் தனது தளத்தில் பாவனையாளர்களை அதிக நேரம் வைத்திருக்க பேஸ்புக் எதிர்ப்பார்த்துள்ளதாக சுட்டிக்காட்டபடுகின்றது.
வேறு சில வலையமைப்புகளிலும் ஹேஸ்டெக் பாவனியிலுள்ள போதிலும், டுவிட்டரைக் கருத்தில் கொண்டே இதனை பேஸ்புக் தனது வலையமைப்பில் அறிமுகப்படுத்தவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
கடந்த சில காலங்களாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்கள் போட்டியாக பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.
அவற்றில் ஒன்றே இது என தெரிவிக்கப்படுகின்றது.

விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு

விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு

நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணணி மீது அதிக ஆர்வம் இருக்கும்
அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.
நாம் விண்டோசின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம். இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும்.
பின்னர் கணணியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த மென்பொருள் நம் கணணியை அப்படியே ஆப்பிள் கணணி போல தோற்றத்தில் மாற்றுகிறதுமற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.
குறிப்பிட்ட சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள். இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.
பின்னர் உங்கள் கணணியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது. அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.
இதனை பெறுவதற்கு உங்கள் டெஸ்க்டொப்பில் வலது கிளிக் செய்து அதில் PERSONALIZE என்பதை தேர்வு செய்யுங்கள். அதில்INSTALLED THEMES என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள்.

வைரஸ்களை தடுப்பதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 முதலிடம்

வைரஸ்களை தடுப்பதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 முதலிடம்

வைரஸ்களை தடுப்பதில் இன்டர்நெ
கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களை தடுத்து, பாதுகாப்பான இணைய தேடலில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 முதல் இடத்தை பிடித்துள்ளது.என்.எஸ்.எஸ். லேப்ஸ்(NSS Labs) என்னும் ஆய்வு அமைப்பு மேற்கொண்ட சோதனையில் இந்த விபரம் தெரிய வந்துள்ளது.
700 வகையான மால்வேர் புரோகிராம்களைக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.
28 நாட்களாக குரோம், பயர்பொக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஓபரா மற்றும் சபாரி பிரவுசர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.
இவற்றில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் 99 சதவிகித மால்வேர்களைத் தடுத்தது கண்டறியப்பட்டது.
இரண்டாவது இடத்தைப் பிடித்த குரோம் பிரவுசர் 83 சதவிகித மால்வேர் புரோகிராம்களையே தடுக்க முடிந்தது.
சபாரி மற்றும் பயர்பொக்ஸ் பிரவுசர்கள் 10 சதவிகித மால்வேர்களையும், ஓபராவின் புதிய பதிப்பு 2 சதவிகித மால்வேர்களையும் தடுத்தது.
இந்த ஆய்வின் முடிவில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10 அதிகளவான மால்வேர்களை தடுத்து முதலிடம் பிடித்தது.
இதற்கு காரணம் இவை கேம்ப் (CAMP (content agnostic malware protection) என்னும் தொழில் நுட்பத்தினைக் கையாள்கின்றன.
இந்த தொழில் நுட்பத்தின் மூலம் தரவிறக்கம் செய்யப்படும் மூல தளத்தின் நம்பகத்தன்மை முதலில் சோதனை செய்யப்படுகிறது.
இதன் பின்னர் கணனியில் நிறுவுவதற்கு முன்பு, குறிப்பிட்ட பைல் அல்லது புரோகிராம் சோதனைக்கு உள்ளாகிறது.
மால்வேர் இருப்பதாகச் சோதனையில் தெரிய வந்தால், உடனே எச்சரிக்கை கொடுக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுத்துவது தடுக்கப்படுகிறது.
கூகுளைப் பொறுத்தவரை குரோம் உலாவியில் Safe Browsing API v2 என்ற தொழில் நுட்பமும் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

இணையத்தில் பாதுகாப்பாக தேட getcocoon

இணையத்தில் பாதுகாப்பாக தேட getcocoon

இணையத் தேடலில் பாதுகாப்பை அளிக்கிறது getcocoon தளம். இத்தளம் அளிக்கும் உலவி நீட்சியை நீங்கள் பயன்படுத்தும்பொழுது, கூகிள் (Google Search), யாஹூ(Yahoo), பிங்(Bing) போன்ற தேடு இயந்திரங்கள் குக்கீஸ்களைப் பயன்படுத்தி, நீங்கள் தேடும் தகவல்களை சேகரிப்பதை தடுக்கிறது.
பொதுவாக தேடுஇயந்திரங்கள் உங்கள் கணினியில் cookies மென்பொருளைப் பயன்படுத்தி உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் இணையதளத்தில் என்ன தேடுகிறீர்கள் என்பதைக் கண்காணித்து, அத்தகவல்களை சேமித்து வைத்துவிடும்.

அவ்வாறு சேமித்து வைப்பதால் உங்களைப் பற்றிய ரகசியங்களும் கண்காணிக்கப்பட்டு, நீங்கள் அடிக்கடி என்ன தேடுகிறீர்கள். எது தொடர்புடைய தகவல்கள் உங்களுக்குத் தேவைப்படுகிறது என்பதை புரிந்துகொண்டு, உங்கள் தேடல்களுக்கு ஏற்ற முடிவுகளை அளிக்கிறது தேடு இயந்திரம் (Search Engine).
getcocoon for safety search on internet
இதுபோன்ற தேடல் தகவல்களை சேகரிப்பதைத் தடுத்து, உங்களுடைய தேடலுக்குப் பாதுகாப்பு அமைத்துக் கொடுக்கிறது  கூகுன்.
அதாவது நீங்கள் இணையத்தில் உலாவும்போது (இணையதளம் அல்லது தேடியந்திரங்களில் தேடும்போது ) குக்கீஸ்கள்  உங்கள் இணையச் செயல்பாட்டை (Internet Activity) கண்காணிக்க விடாமல் தடுக்கிறது. உங்களுக்கு பாதுகாப்பாட இணையத் தேடலை வழங்குகிறது(Safety Search).
இதனால் உங்களுடைய தேடல் ரகசியங்கள் பாதுகாக்கப்படுகிறது (secret of safe search). இணையம் மூலம் பரவும் தீங்கிழைக்கும் வைரஸ், மால்வேர் போன்றவைகளையும் தடுக்கிறது.
இது alternate email உருவாக்கி spam மெயில்களிலிருந்து பாதுகாக்கிறது.
மேலதிக விவரங்களுக்கு https://getcocoon.com/plans தளத்திற்கு செல்லவும்.

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளது என அறிய வேண்டுமா!

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளது என அறிய வேண்டுமா!

உங்கள் புகைப்படங்கள் இணையத்த
இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personalphotos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது.
மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள். உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள். ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும்.
இதையெல்லாம் எப்படி கண்டறிவது? இதற்கு தான் TinEye என்று ஒரு புதுமையான இணையதளம் உள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும். உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தின் இணைப்பு கொடுத்ததும் அல்லது உங்கள் கணிப்பொறியில் இருந்து அப்லோட் (upload) செய்தும் தேடலாம்.
இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது. இதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். மேலும் உங்கள் புகைப்படங்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும். இது இலவச சேவை தான்.
இதனை வலை உலவிகளில் நீட்சியாகவும் (addon IE/firefox) பயன்படுத்தி எளிதாக தேடலாம். எந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாதவர்களும் எதாவது இணையத்தில் தரவிறக்கிய படங்களையும் தேடலாம். முடிவுகள் எந்தெந்த இணையதளங்களில் காணப்படுகிறது என்று அறியலாம்.

20 செக்கன்களுக்குள் செல் ஃபோனை ரீசார்ஜ் செய்யலாம் : அமெரிக்க பெண் சாதனை!

20 செக்கன்களுக்குள் செல் ஃபோனை ரீசார்ஜ் செய்யலாம் : அமெரிக்க பெண் சாதனை!

article-2327021-19E12ED4000005DC-514_636x382-285x150
அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது சிறுமி ஏஷா காரே (Eesha Khare) செல்ஃபோன்களை 30 செக்கன்களுக்கும் குறைவாக, குறைந்தது 20 செக்கனில் ரீசார்ஜ்
செய்யக் கூடிய உபகரணம் ஒன்றைக் கண்டுபிடித்து, ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்பதற்கு உதவும் நிதியினை ஈட்டக் கூடிய முக்கிய விஞ்ஞான விருது ஒன்றைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் இருந்து கடந்த வாரம் போனிக்ஸுக்கு இன்டெல் நிறுவனத்தின் விஞ்ஞான பொறியியல் கண்காட்சிக்கு வருகை தந்ததுடன் தனது படைப்பையும் அதில் முன் வைத்தார். இவரது கருவியை அங்கு ஏற்றுக் கொண்டதுடன் இவரைக் கௌரவித்து இளம் விஞ்ஞானி களுக்கான இரு விருதுகளில் ஒன்றை அவருக்கு வழங்கினர்.
இவரது உபகரணம் நீள்சதுர வடிவிலுள்ள ஒரு சூப்பர் மின்தேக்கி (supercpacitor) ஆகும். இதில் மிகக் குறைந்த கொள்ளளவில் அதிக சக்தியைச் சேகரிக்க முடியும். மேலும் இதில் பயன்படுத்தப் பட்டுள்ள தொழிநுட்பத்தால் அவுட்டோ மாபைல் பேட்டரிகளை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
ஏஷா காரே இற்குக் கிடைக்கப் பெற்ற உதவித்தொகை $50 000 டாலர்கள் ஆகும். கடந்த வாரம் இடம்பெற்ற இன்டெலின் இக் கண்காட்சியில் சுமார் 1500 இளம் விஞ்ஞானிகள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் விஞ்ஞானிக்கான இரண்டாவது விருதைப் பெற்றவர் ஹென்றி லின் எனப்படும் இளைஞராவார், இவர் சிமுலேசன் முறையில் ஆயிரக் கணக்கான கேலக்ஸிகளின் கூட்டுக்கள் (clusters of galaxies) குறித்த விளக்கத்தை அளித்ததற்காக கௌரவிக்கப் பட்டார்.
இறுதியாக இக்கண்காட்சியின் முக்கிய விருதைப் பெற்றவர் 19 வயதான லோனுட் எனும் ரோமானியர் ஆவார். இவர் செயற்கை அறிவைப் பயன்படுத்தி மலிவான எரிபொருட் செலவில் சுயமாக ஓட்டக் கூடிய கார் இனை வடிவமைத்ததற்காக $75 000 டாலர்கள் பெறுமதியான இப்பரிசைத் தட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொற்களால் படங்களை உருவாக்குவோம்

சொற்களால் படங்களை உருவாக்குவோம்

wordify-300x175
எழுத்துக்களிலிருந்து படங்களை உருவாக்குவதை நீங்கள் பல இடங்களிலும் கண்டிருக்கக்கூடும்.
இப்பொழுத நீங்களும் உங்களுக்கு விரும்பிய படமொன்றினை எழுத்துக்களை கொண்டு உருவாக்கிட முடியும். இதற்கு Wordifyஎன்கின்ற மென்பொருள் உதவுகின்றது.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுடைய படத்தை தேர்ந்தெடுத்து பின் உங்களுக்கு தேவையான சொற்களை கொடுத்து விடுவதுதான்.
உங்கள் படம் சொற்களால் தயாராகிவிடும். கவனிக்க : இம்மென்பொருள் மக் இயங்குதளத்திற்கானது.

RAM மெமரியை கிளீன் செய்து வேகத்தை அதிகரிப்பது எப்படி???

RAM மெமரியை கிளீன் செய்து வேகத்தை அதிகரிப்பது எப்படி???

இந்த விடயம் சிலருக்கு பழைய விடயமாக இருக்கலாம் ஆனால் சில வேளைகளில் உங்களுக்கு இது உதவலாம் அதாவது நீண்ட நேரம் கணணியை பயன்படுத்தினாலோ அல்லது Games ,பெரிய அளவிலான Software களை பாவிக்கும் போதும் கணணியின் வேகம் ஆனது குறைவடைந்து விடும்
அந்த வேளையில் றம்(RAM) மெமரியை கிளீன் செய்து எவ்வாறு கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது என்று பார்ப்போம்
01.ஒரு நோட்பாட்டை (Notepad) ஒப்பன்(Open) செய்யுங்க.
02.அதில் கீழ் வருமாறு டைப் (Type) செய்க.
FreeMem=Space(128000000)
03.பின் File இல் சென்று Save As இல் RAMcleaner.vbs என்று கொடுத்து Save செய்யுங்க.
04.நீங்கள் Save செய்த RAMcleaner.vbs ஒப்பன்(Open) செய்யுங்க.
05.அவ்வளவுதான் றம்(RAM) மெமரியை கிளீன் செய்துவிட்டோம்..

விண்டோஸ் XP இன்னும் பயன்படுத்துகிறீர்களா?

விண்டோஸ் XP இன்னும் பயன்படுத்துகிறீர்களா?

xpவிண்டோஸ் எக்ஸ்பி இன்னும் ஏறத்தாழ ஓர் ஆண்டு காலத்தில் முழுவதுமாகக் கைவிடப்பட உள்ளது. நீங்கள் இன்னும் வேறு ஆப்பரேட்டிங்சிஸ்டத்திற்கு மாறாமல், எக்ஸ்பி சிஸ்டத்தையே இறுகப் பிடித்துக் கொண்டு இயங்கி வருகிறீர்களா?
கீழே தரப்பட்டுள்ள தகவல்களையும், டிப்ஸ்களையும் கவனமாகப் படிக்கவும். பலர் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே தொடர்ந்து பயன்படுத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கட்டணம் செலுத்தி புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாங்குவதனைத் தள்ளிப்போடலாமே என்ற எண்ணமே முக்கிய காரணம்.
ஆனால் சில உண்மைகளை நாம் எடுத்துக் கொண்டு எண்ணிப் பார்க்க வேண்டும். விண்டோஸ் எக்ஸ்பி 2001ல் வெளியானது. அடுத்து 12 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த ஒரு டஜன் ஆண்டில், ஏதேனும் ஒரு நிகழ்வில் நீங்கள் புதிய சிஸ்டத்திற்கு, புதிய கணனிக்கு மாறி இருக்க வேண்டும்.
பண அடிப்படையில் பார்த்தால் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் நான்கு மாற்றங்களுக்கு முன்னால் இருந்ததனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது தெரியும். இது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாதது. பிரச்னை ஏற்பட்டால், அதிலிருந்து மீள்வதற்கான செலவு, புதிய சிஸ்டம் மற்றும் கணனிக்கு மாறுவதைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும்.
இணையவெளியில் உலாவும் திருடர்கள், எக்ஸ்பிக்கு தொடர்ந்து குறி வைத்துக் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம், இன்னும் பலர் இதனையே பயன்படுத்தி வருவதே.
மைக்ரோசாப்ட் சப்போர்ட் நிறுத்தப்படும் பட்சத்தில், பாதுகாப்பு எதுவும் இல்லாத ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் எக்ஸ்பி மாறிவிடும். உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருட ஒரு சிறிய இமெயில் கூட போதும் என்ற நிலை உருவாகும்.
மைக்ரோசாப்ட், இன்னும் ஓராண்டில், எக்ஸ்பி சிஸ்டத்தின் இயக்கத்திற்கு அப்டேட் எதனையும் தராது என்பது உறுதி. எனவே பயனாளர்களுக்கு எக்ஸ்பி அவர்களின் பிடியில் இருக்காது. என்ன விளைவு ஏற்பட்டாலும் அவர்கள் மட்டுமே அதனைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.
பழைய கணனிகளில் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்து இயக்கினாலும், அதில் இயங்கும் புரோகிராம்களுக்கு முழுமையான செயல்பாடு கிடைக்காது.
உங்கள் நிறுவனத்தில் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்த உங்கள் அலுவலர்களைக் கட்டாயப்படுத்தினால், தாமதமான வேலைப்பாட்டிற்கு நீங்களே வழி வகுத்து நிறுவனத்தின் நேரம் மற்றும் உழைப்பு இழப்பிற்கு வழி வகுக்கிறீர்கள்.
பழைய குதிரையை என்ன தட்டினாலும், அதனால் முடிந்தால்தானே ஓடும். குதிரை மீது அமர்வதற்கு புதிய சீட் வாங்கிக் கொடுத்தாலும், குதிரை பழையதாக இருந்தால், அதனால் இயன்றவரை தானே ஓடும்.
இன்னொரு வழியில் இதனைப் பார்க்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட கார் ஒன்றை நல்ல முறையில் பராமரித்தால் நீங்களே ஒரு மெக்கானிக்காக இருந்தால், தொடர்ந்து ஓட்ட முடியும். ஆனால், எண்ணிப் பாருங்கள்.
அதே போல் தான் விண்டோஸ் எக்ஸ்பியை இன்றைய சூழ்நிலையில் இயக்குவது. விண்டோஸ் எக்ஸ்பி உருவாகி வெளியான காலத்தில், கணனியின் இயங்கும் திறன் மற்றும் தன்மைக்கேற்ப எக்ஸ்பி உருவாக்கப் பட்டது. 640 பிக்ஸெல்கள் கொண்ட திரை அகலத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6க்கென உருவானது. தற்போது அது இயங்கவே முடியாது என்று கைவிடப்பட்ட ஒரு பிரவுசராகும். ஆனால், அதனை இயக்க உருவான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நாம் இன்னும் இயக்கிக் கொண்டிருக்கிறோம்.
விண்டோஸ் எக்ஸ்பி வெளியான போது, யு.எஸ்.பி.2 சப்போர்ட் செய்யப்படவில்லை. ராம் மெமரியின் அளவு மிகக் குறைவே. 137 ஜிபி அளவிலான ஹார்ட் டிஸ்க் தான், அதிக பட்ச அளவாக இருந்தது. இப்போது தொடக்க நிலையே 500 ஜி.பி. ஆக தற்போது உள்ளது.
எக்ஸ்பி பயன்படுத்தும் சிலர், தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8ல் இயங்காது என்று எண்ணுகின்றனர். எனவே தான் எக்ஸ்பி மட்டும் எங்களுக்குப் போதும் என்கின்றனர். இதை நீங்களாக முடிவு செய்யாதீர்கள்.
கீழே உள்ள மைக்ரோசாப்ட் தளத்திற்குச் சென்று கண்டறியுங்கள். “சரி வராது” என்று பதில் வந்தால், புதிய சிஸ்டத்திற்கு ஏற்ற வகையில் அப்ளிகேஷன் புரோகிராமினை மாற்றுங்கள்.
சரியாக இயங்காது என்று நீங்கள் எண்ணும் புரோகிராம்கள், அண்மைக் காலத்திய இயக்க முறைகளுக்கு ஏற்றவகையில் மாற்றப் பட்டிருக்கும். நீங்கள் அப்டேட் செய்திடாமல் அதனைக் குற்றம் சொல்லிப் பலனில்லை.
புதிய பதிப்பிற்கு மாறினால் கூடுதல் வசதிகள் கிடைக்கலாம். உங்கள் அலுவலகம் மற்றும் வர்த்தகச் செயல்பாடுகளுக்கு இதனால் அதிக லாபம் வரலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி வந்த காலத்தில் மடிக்கணனிகள் ஆடம்பரமான கம்ப்யூட்டிங் முறையின் ஓர் அடையாளமாகக் கருதப்பட்டது. ஸ்மார்ட் போன்கள் என்பவை பற்றி யாரும் எண்ணிக் கூடப் பார்த்திராத காலம். ஐபேட் போன்ற சாதனங்கள் எல்லாம், விஞ்ஞானக் கற்பனைக் கதைகளில் மட்டுமே மிதந்தன.
யு ட்யூப், ஸ்கை ட்ரைவ், ஜிமெயில், மை ஸ்பேஸ் என்பவை எல்லாம் அப்போது இல்லை. பயர்பாக்ஸ், உபுண்டு லினக்ஸ், ஐபாட் என்பவை எல்லாம் கேட்காத பெயர் களாகும். ஐபோனுக்கு ஐந்தாம் நிலையில் அப்டேட் செய்திடும் போது ஐபோன் வராத காலத்தில் இருந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேவையா என நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
எக்ஸ்பி சிஸ்டம், கணனியை இயக்கும் சாதாரண மனிதனின் தேவைகளுக்கேற்ப எளிமையாக கம்ப்யூட்டிங் அனுபவத்தினைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டது.
தற்போது அந்த மனிதனின் வாழ்க்கை முறை எல்லாம் மாறிவிட்டது. அப்போது கணனி வழியாக இணையதளம் கிடைத்ததா? அனைத்து பண பரிமாற்றமும் நடந்தேறியதா? ஆனால், தற்போது மேற்கொள்கிறோம். அதனால், கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதற்கு புதிய சிஸ்டம் வேண்டும்.
பாதுகாப்பு என்ற கோணத்தில், விண்டோஸ் எக்ஸ்பிக்கென அளிக்கப்பட்ட சர்வீஸ் பேக் புரோகிராம்கள், அதன் வலிமையை இழந்துவிட்டன. விண்டோஸ் 7, எக்ஸ்பி சிஸ்டத்தின் பாதுகாப்பினைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக பாதுகாப்பானதாக உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பினைத் தருகிறது.
விண்டோஸ் எக்ஸ்பி எனக்கு கை வந்த சிஸ்டமாகி விட்டது என்று பாட்டி கதை எல்லாம் சொல்ல வேண்டாம். கை வந்த சிஸ்டம், உங்களின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் என்று உணர்ந்து கொள்ளுங்கள். விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டம் இன்னும் எளிமையாகக் கை வந்த கலையாக உங்களிடம் ஒட்டிக் கொள்ளும்.
எனவே, விண்டோஸ் 9 வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி போடாமல், எக்ஸ்பிக்கு டாட்டா சொல்லி, உயர்நிலை தொழில்நுட்பத்திற்கு மாறவும்.
கணனியையும் அதற்கேற்றார்போல் மாற்றவும். பத்து ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பதே ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு வேடிக்கையான அனுபவம் ஆகும். முன்பே இது மாற்றப்பட்டிருக்க வேண்டும்.