மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (3) - Publisher,Infopath, Sharepoint, Outlook, Project, Communicator, Access, OneNote, FrontPage, Visio/MS-OFFICE


Ms-Publisher
இப்படி ஒரு சாஃப்ட்வேர் MS-OFFICE கூட இருக்குன்னு நிறைய பேருக்கு தெரியுமோ தெரியாதோ! ஆனால் இதன் பயன்கள் மிக அதிகம். இன்று பலர் ப்ரிண்ட் மீடியாவிற்கு corel drawஐ பயன்படுத்துகின்றனர். ஆனால் அதைவிட எளிதான அதே உபயோகமுள்ள மென்பொருள்தான் Publisher. விசிடிங் கார்ட்கள், காலண்டர்கள், பிரவுச்சர்கள், லெட்டர்பேட், நியூஸ்லெட்டர் போன்ற பலவற்றை எளிதில் உருவாக்கலாம். இதில் ஏற்கனவே டெம்ளீட்கள் உள்ளதால் அவற்றை விரைவாக செய்யலாம். நான் கடந்த மூன்று வருடங்களில் உருவாக்கிய பேனர், காலாண்டர், ஸ்டிக்கர், லெட்டர்பேட், போன்ற டிசைன்கள் அனைத்தையும் இந்த மென்பொருளிலேயே செய்திருக்கிறேன். ஆனால் பல நிறுவனங்கள் corel drawயே பயன்படுத்துவதால் இதில் நாம் வேலை செய்தாலும் source ஃபைலை வாங்க மறுக்கிறார்கள். (நான் இமேஜாகத் தான் டிசைன்களை கொடுத்தேன்.)

நீங்களே உங்களுக்கான அழகான விசிடிங் கார்டை உருவாக்கி தொடங்கி பாருங்கள்.



Microsoft Infopath

simple மற்றும் complex-ஆன formகளை உருவாக்க இது பயன்படுது. இதை பயன்படுத்தி ஃபார்ம்களை யார் வேணாலும் எளிதாக உருவாக்கிடலாம். ஆனால் அதை வெப் பேஜில் கொண்டு வர கொஞ்சம் புரோக்ராமிங் தெரியணும். மேலும் இதுக்கு Ms-Sharepoint அப்படிங்கிற இன்னொரு Ms-office தொடர்பான சாஃப்ட்வேர் தேவை.


Ms-Sharepoint

இது ஒரு தனி செர்வரின் கீழ் web publishing-காக பயன்படுகிறது. இந்த சாஃப்ட்வேரினால் எல்லோரும் தகவல்களை பரிமாரிக்கலாம். வெப் பேஜை செட் அப் செய்யலாம், அதில் உள்ள ஃபைல்களை எடிட் செய்யலாம். பேருக்கேத்த மாதிரி எல்லோரும் பகிர்ந்து வேலை செய்ய இந்த மென்பொருள்.


Outlook

இதுவும் சரி, Outlook express-ம் சரி ஒரே வேலைதான் செய்யுது. முதாலவது ms-office கூட வருது. இரண்டாவது operating system கூடவே வருகிறது. அவ்வளவுதான். gmail, yahoo  போன்ற மின்னஞ்சல் செர்வர்களுக்கு பிரவுசர் மூலமாக செல்லாமல் நேரடியாக மின்னஞ்சல்களை பார்க்கவும், offline-ல் பழைய மின்னஞ்சல்களை பார்க்கவும் பயன்படுகிறது. இதை gmail உடன் எப்படி set up செய்யவது என்று google தகவல் தருகிறது. லிங்க்: Outlook 2003 configuration

Microsoft Project

இந்த சாஃப்ட்வேர் முழுக்க முழுக்க புரொஜக்ட் மேனேஜர்களுக்காக மட்டுமே.  புரொஜக்ட் பிளான்களை மேம்படுத்தவும், வேலைகளுக்கு resources களை கொடுக்கவும், புராசஸ் எப்படி இருக்கு பார்க்கவும், பட்ஜெட் சரியா இருக்கிறதா என சரிபார்க்கவும் இப்படி முழுமையா ஒரு புரொஜக்ட் மேனேஜரின் வேலையை எளிதாக்க பயன்படும் சாஃப்ட்வேர் இது. [இந்த அளவுக்கு வேலை பார்க்கிறவங்களுக்கு இந்த சாஃப்ட்வேரே தேவையில்லை!  :-)  ]
Communicator
இது ஒரு instant messaging software ஆகும். instant messaging மட்டுமில்லாமல், Voice Over IP, மற்றும் Video Conferencing போன்றவற்றையும் எளிதாக செய்யலாம்.மற்ற Ms-office அப்ளிகேஷன்களோடு இணைந்து வேலை செய்யும்.இது வேலை செய்யும் விதம் பற்றிய வீடியோக்களை இங்கே காணலாம்.

http://office.microsoft.com/en-us/communicator-help/demo-use-office-communicator-2007-to-collaborate-with-colleagues-HA010240260.aspx


Access

இது செர்வர் டேடாபேஸ்களை கையாளுவதற்கான மென்பொருள். அதிக பயிற்சியில்லாத ஒருவர் டேடாபேஸை எளிதாக கையாள இது உதவுகிறது. சாதாரணமாக இல்லாமல், மேம்படுத்தப்பட்ட வகையில் பல விதங்களில் MySQL, Oracle போன்ற டேடாபேஸ்களை கையாள உதவுகிறது. இது Software developers மற்றும் data architects ஆகியோருக்கு சிறந்த மென்பொருள் ஆகும்.


OneNote

கல்வி, அலுவலகம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக தகவல்களை சேமிக்க உதவும். மென்பொருள். படங்கள், ஒலிகள், இணையப் பக்கங்கள் ஆகியவற்றை இணைக்கலாம். மேலும் மற்ற ms-office மென்பொருள்களில் செய்யக் கூடிய டிசைனிங் & ஃபார்மெட்களையும் செய்யலாம். சேகரித்த தகவல்களை ஒழுங்குபடுத்தி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.


FrontPage

இது கிட்டத்தட்ட dreamweaverக்கு ஒப்பானது. எளியமுறையில் இணையப் பக்கங்களை உருவாக்க பயன்படுகிறது.இரண்டுமே WYSIWYG editorதான் என்றபோதும், dreamweaver-ல் நீங்கள் html கோட்களை அதிகமாக பயன்படுத்த வேண்டியிருக்கலாம். ஆனால் FrontPage-ல் எல்லாவற்றையும் எளிதாக வடிவமைத்து நேரத்தை மிச்சமாக்கலாம். html கோட்களை பற்றி தெரியாதவர்கள் ஆரம்பத்தில் வெப் பேஜ்களை அமைக்க FrontPage சிறந்தது. html கோட்களை கற்றுக் கொண்டபின் dreamweaverக்கு மாறலாம்.
டவுன்லோட் லிங்க்:http://www.megaupload.com/?d=0MPMXPB0 (194 mb)

Microsoft Visio

இது வரையும் சாஃப்ட்வேர். ஃப்ளோசார்ட்கள் உருவாக்க சிறந்தது. ஃப்ளோசார்ட்களை எக்சலிலேயே நன்றாக உருவாக்கலாம் என்றாலும் இதில் கொஞ்சம் மாடலிங் டெக்னிக் உள்ளது அதனால் ஓரளவு 3டி எஃபக்ட் கிடைக்கும்.  இதன் மூலம் லோகோ டிசைன்களை கூட எளிதாக உருவாக்கலாம். பில்டிங் பிளான், எலக்ட்ரிகள் சர்க்யூட், மெக்கானிகல் பார்ட்ஸ், போன்ற பல வடிவங்கள் வெக்டார்  வடிவில் உருவாக்க முடியும். இதை கற்றுக் கொள்ள தனி டுடோரியலே உண்டு.



டவுன்லோட் லிங்க்: Microsoft visio portable  (113 mb)


இத்துடன் MS-OFFICE தொடர்பான அனைத்து மென்பொருட்களை பற்றியும் குறிப்பிட்டாகி விட்டது. எல்லா மென்பொருளும் MS-OFFICE-ன் எல்ல தொகுப்புடனும் வராது. சில தொகுப்புகளில் சில மென்பொருட்கள் இருக்கும், சில இருக்காது. அதேபோல் முக்கியமானவைகளுக்கு மட்டுமே லிங்க் தந்துள்ளேன்.

No comments:

Post a Comment

Thank you for using this blog.