தலையால் இயக்ககூடிய ஐபோன், ஐபேட்: பாவனையாளர்கள் வியப்பு!

தலையால் இயக்ககூடிய ஐபோன், ஐபேட்: பாவனையாளர்கள் வியப்பு!

அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றின் இயங்குதளத்தின் புதிய தொகுப்பான ஐ.ஓ.எஸ் 7 இனை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது.
மேலும் டெவலப்பர்களுக்கான சோதனைத் தொகுப்பையும் வெளியிட்டிருந்தது.
முன்னைய தொகுப்புகளை விட முற்றிலும் மாறுபட்டதாக இப் புதிய தொகுப்பு அமைந்துள்ளது.
புதிய தோற்றம், ஐகொன்கள், பட்டன்ஸ், நிறங்கள், முப்பரிமாணமாக காட்சியளிக்கக் கூடியது என பல மாற்றங்களை ஐ.ஓ.எஸ் 7 இல் அப்பிள் ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இது அண்ட்ரோய்ட்டை ஒத்ததாக இருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இந்நிலையில் தலையை அசைப்பதன் மூலம் ஐபோன், மற்றும் ஐபேட்டின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையிலான வசதியையும் அப்பிள் ஐ.ஓ.எஸ் 7 இல் உள்ளடக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் அப்ளிகேசன்களை திறத்தல், சத்தத்தைக் கட்டுப்படுத்தல், போன்ற பல செயற்பாடுகளை மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
இதனை ‘accessibility option’ எனப்படும் பொதுவாக கேட்டல் குறைபாடு, பார்வைக் குறைபாடு மற்றும் விசேட தேவையுடையோர்களுக்கான வசதிகளின் ஓர் அங்கமாகவே அப்பிள் உருவாக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனினும் இது அனைவரையும் வெகுவாகக் கவருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இவ் வசதி சோதனை தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற போதிலும் இது உத்தியோகபூர்வமாக அனைவருக்குமென வெளியிடப்படும் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்குமென உறுதியாக கூற முடியாதுள்ளது.
அப்பிள் தனது ஐ.ஓ.எஸ் 7 இனை அடுத்த ஐபோனை அறிமுகப்படுத்தும் போது வெளியிடுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
306d01bb2ade5afff4a91688f14ac407

No comments:

Post a Comment

Thank you for using this blog.