பேஸ்புக் பேஜின் லைக் எண்ணிக்கையை இனி இப்படியும் காட்டலாம்
watch vedio click this image
குறுகிய காலத்தில் பிரபலமாக பில்லியன் கணக்கான பயனர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன.அவற்றில் ஒன்றுதான் விரும்பிய பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி லட்சக்கணக்கானவர்களின் விருப்பத்தை (Like) பெறுவது. இவ்வாறு பெறப்படும் லைக் எண்ணிக்கையினை பேஸ்புக் தளத்தினை பயன்படுத்துபவர்களால் மட்டுமே பார்வையிட முடியும்.
ஆனால் பல வியாபார நிறுவனங்களும் தனது வியாபார உத்திகளில் ஒன்றாக இந்த பேஸ்புக் லைக்கினை பயன்படுத்தி வருகின்றது.
இவ்வாறானர்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் லைக்கின் எண்ணிக்கையினை எடுத்துக்காட்டுவதற்கு Fliike எனும் கணக்கீட்டு சாதனம் (Fliike physical Facebook fan counter) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சாதனம் லைக் அளவுகளில் ஏற்படும் அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சிகளை நேரடியாக உடனுக்குடன காட்டிக்கொண்டு இருக்கும்.
இதன் விலை 390 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
No comments:
Post a Comment
Thank you for using this blog.