கூகுளுக்கு அடுத்த ஆப்பு!!!

கூகுளுக்கு அடுத்த ஆப்பு!!!

24-dd
இணையதள அரசன் என்று அழைக்கப்படும் கூகுளுக்கு இது போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். கூகுளுக்கு இது போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.
கூகுள் நிறுவனம், பிரைவசி பாலிசியில் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என பல நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஏற்கனவே சர்வர் அமைப்பது தொடர்பாகவும், தங்களது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வர வேண்டும் என்றும் கூகுள் நிறுவனத்துக்கு சீன அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது.
தகவல் பாதுகாப்பு விதிகளை 3 மாதங்களுக்குள் அமல்படுத்தாவிட்டால் ரூ.117 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அரசும் எச்சரித்துள்ளது. இந்நிலையில், கூகுள் நிறுவன ஊழியர்கள் எர்த் என்ற சேவைக்காக உலகம் முழுவதும் கேமராவும் கையுமாக அலைகின்றனர்.
எல்லா இடங்களையும் படம் பிடிக்கின்றனர். அவற்றை கூகுள் எர்த் மூலம் முப்பரிமாண முறையில் வழங்கி வருகிறது. இதனால், உலகின் எந்த இடத்தையும் மிக துல்லியமாக பார்க்க முடியும். நடை பாதை வரை கூட எர்த் சேவையில் பார்க்க முடியும். இந்நிலையில் இங்கிலாந்தின் தெருக்கள், வீடுகள், கட்டிடங்கள் ஆகிய அனைத்தையும் கூகுள் புகைப்பட குழு படம் எடுத்து தள்ளி வருகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் இது தனது லட்சியத் திட்டமாக்கும் என்று கூறி கூகுள் வரைபடத் தயாரிப்பிற்காக உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இதற்கெனத் தயாரிக்கப்பட்ட சிறப்புக் கார்களை அனுப்பியது. அதிலும் கூகுள்’ஸ் ஸ்ட்ரீட் வியு என்று அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழு் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மைல்கள் பயணம் செய்த இந்தக் கார்கள், இவற்றில் பொருத்தப்பட்டிருந்த பிரத்தியேகக் கருவி மூலம், இயற்கை எழில் மிகுந்த பகுதிகளுடன் சாலைகளின் வரைபடங்களை பதிவு செய்தன. ஆனால், அப்போது பணியில் இருந்த பொறியாளர் ஒருவர், இந்தக் கார்களின் அருகில் கடந்து செல்வோரின் பாதுகாப்பில்லாத இணையதளப் பதிவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு மென்பொருள் கருவியைத் தயாரித்து இந்தக் கார்களில் பொருத்தியுள்ளார். அதில் பலரது சொந்த விஷயங்களும், நிதி விபரங்களும் பதிவாகியுள்ளன.
இது தங்களது எண்ணமல்ல என்று தெரிவித்த கூகுள் நிறுவனம் அத்தகையத் தகவல்களை அழித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால்,இதுபோல் பதிவு செய்யப்பட்ட சில தகவல்களைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாக பிரிட்டிஷ் தகவல் அறியும் அலுவலகத்தில் இருந்து கூகுள் நிறுவனத்திற்கு ஒரு அறிக்கை வந்துள்ளது. இதையடுத்து இம்மையத்தின் கமிஷனர் ஸ்டீபன் எக்கர்ஸ்லெ, “கூகுள் ஸ்ட்ரீட் வியூ குரூப்பால் ஏராளமான தனிப்பட்ட வீடுகளின் புகைப்படங்களை அவை சட்டவிரோதமாக பதிவு செய்து வருகிறது என இங்கிலாந்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன்ன. இதையடுத்து கூகுள் நிறுவனத்தின் நடவடிக்கை தனி மனித பாதுகாப்புக்கும், உரிமைகளுக்கும் ஆபத்தானது. சட்ட விதிகளை மீறிய செயல் என்று இங்கிலாந்து கண்டித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இப்படியே போனா கூகுளுக்கு ஆப்பு நிச்சயம் என்று மட்டும் நல்லா தெரியுது.

No comments:

Post a Comment

Thank you for using this blog.