உலகின் நம்பர் 1 சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்குகின்றது சீனா
ஜூன் மாதம் வெளியிடப்பட்ட உலகின் முதல் 500 அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரகளின் பட்டியலில் முதலிடத்தை சீனா பெற்றுள்ளதுடன் அதன் வேகம் ஏனைய எந்த ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை விடவும் 2 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகின்றது.
டியான்ஹே-2 எனப் பெயரிடப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர் அதிகாரப் பூர்வமாக உலகின் நமபர் 1 அதிவேக கணிணி என திங்கட்கிழமை பிரகடனப் படுத்தப் பட்டது.
மேலும் இதற்கு முன் நம்பர் 1 இல் இருந்த அமெரிக்காவின் டைட்டன் ஐயும் இது மிஞ்சி விட்டது. உலகளவில் மிகச் சிறந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானிகளைக் கொண்ட ஓர் குழு ஒவ்வொரு வருடமும் இரண்டு தடவை டாப் 500 அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களின் விபரங்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் சீனாவின் டியான்ஹே-2 கம்ப்யூட்டர் ஒரு செக்கனுக்கு 33.9 பெட்டாஃப்லொப்ஸ் (petaflops)
அதாவது Quadrillions கணிப்புக்களை மேற்கொள்ளக் கூடியது என்றும் இது இப்பட்டியலில் 2 ஆம் இடத்தைப் பிடித்திருக்கும் டைட்டன் ஐ விட இரு மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதாவது Quadrillions கணிப்புக்களை மேற்கொள்ளக் கூடியது என்றும் இது இப்பட்டியலில் 2 ஆம் இடத்தைப் பிடித்திருக்கும் டைட்டன் ஐ விட இரு மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த டியான்ஹே-2 சூப்பர் கம்ப்யூட்டர் சீனாவின் தேசிய பாதுகாப்புத் தொழிநுட்ப பல்கலைக் கழகத்தால் உருவாக்கப் பட்டதுடன் தென்மேற்கு சீனாவின் குவாங்ஷோ இல் உள்ள சூப்பர் கம்ப்யூட்டர் நிலையத்தில் இவ்வருட இறுதியில் நிறுவப் படவுள்ளது. மேலும் டியான்ஹே-2 விமானங்களுக்கான சிமுலேசன் பரிசோதனைகள், மிகப் பாரிய தகவல்களைக் கையாளுதல், சீன அரசின் பாதுகாப்புக்கு உதவி வழங்குதல் ஆகிய தேவைகளுக்குப் பயன்படுத்தப் படும் என்றும் செய்திகள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment
Thank you for using this blog.