இதோ வந்துவிட்டது உங்கள் குடும்ப ரோபோ
நீங்கள் அலுவலக வேலையை முடித்து விட்டு சோர்வாக வீடு திரும்பும் நேரத்தில் உங்களுக்காக ஒரு ரோபோ சுடச் சுட காபி போட்டுக் கொடுத்தால் எப்படி இருக்கும்? வீட்டில் பெண்கள் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது குழந்தைகளை அக்கறையாகப் பார்த்துக் கொள்ள ஒரு துணையிருந்தால் எப்படி இருக்கும்?நாம் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் நடப்பதை தெரிந்து கொள்ளும் வசதி கிடைத்தால் எப்படி இருக்கும்? இதெல்லாம் இன்னும் சில வாரங்களில் சாத்தியமாக போகிறது. ஆம் ஃபேமிலி அசிஸ்டெண்ட் பணிகளைச் செய்யும் மனித வடிவிலான ரோபோக்களை ஜப்பானிய நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ரோபோவின் பெயர் ராப்பிரோ (Rapiro).
இந்த ராப்பிரோ ரோபோ, ராஸ்ப்பெர்ரி பை (Raspberry Pi) என்ற லினக்ஸ் இயங்கு தளத்தை (Linux-based PC) கொண்டு இயங்கும் கணினியின் உதவியுடன் இயங்குகிறது.ஆனாலும் காபி போடுவ்து மட்டுமின்றி, இந்த ராப்பிரோ, நாள்காட்டி-யை (calendars) நிர்வகிப்பதிலிருந்து துவங்கி, தினசரி வானிலை குறித்த தகவல்கள் வழங்குவது வரை மேலும் பல்வேறு வகையிலான செயல்பாடுகளை செய்யும் வகையில் புரோகிராம் செய்து கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள்.
அத்துடன் இந்த ராப்பிரோ-க்கு, கேமரா இன்றை பொருத்தினால் அது நடக்கும் காட்சிகளை பதிவு செய்து தேக்கிக் கொள்ளும் திறன் கொண்டதாக்கும். இந்த ரோபோ, மொத்தம் 12 செர்வோ மோட்டர்கள் (“servo motors”) கொண்டுள்ளது. இந்த மோட்டர்கள், இந்த ரோபோவின் நகரும் தன்மைக்கு உதவுகிறது.இன்னும் சந்தைக்கு வராத ராப்பிரோ மீது மக்கள் இப்போதே ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். இன்னும் சுமார் ஐந்து வாரங்களில் இந்த ராப்பிரோ ரோபோ-வை 350 அமெரிக்க டாலர்களுக்கு மக்கள் வாங்கலாம் என்பது சிறப்பம்சமாகும்
No comments:
Post a Comment
Thank you for using this blog.