போட்டோஷாப்பில் Cinemagraphs உருவாக்குவது எப்படி?

போட்டோஷாப்பில் Cinemagraphs உருவாக்குவது எப்படி?

 Gif படங்கள் கேள்விப்பட்டிருப்போம். பார்த்திருப்போம். இதை அசையும் படங்கள் என்று தமிழில் குறிப்பிடுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்பட்ட படங்களை Gif animation செய்து பெறப்படுபவை Gif வகை படங்கள்.
ஜிப் வகைப் படங்களை போட்டோஷாப் மூலம் எளிதாக செய்யலாம். ஒவ்வொரு படத்தையும் தனி தனி லேயரில வைத்து உருவாக்குவோம்.
ஜிப் வகைப் படங்கள் முழுவதும் அசையும் தன்மையைப் பெற்றிருக்கும்.
அதைப்போலவே தற்பொழுது புதியொரு கிராபிக் (Graph) என்ற படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதை ஒரு தனிப்பட்ட Gif படம் என குறிப்பிடலாம்.
அதாவது ஒரு நிரந்தர பிண்ணினியுடன் இருக்கும் படத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் அனிமேஷன் செய்யப்படும். அந்த பகுதி மட்டும் இயக்கத்தில் இருக்கும். மற்ற பகுதிகள் நிரந்தர பின்னணியில் நிலையாக இருக்கும் கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள்..
creating Cinemagraphs in photoshops cs5
இதுபோன்ற படங்களை போட்டோஷாப் CS5 மென்பொருள் மூலம் உருவாக்கலாம். இந்த வகையான படங்களுக்கு Cinemagraphs  என்று பெயர்.
ஜிப் அனிமேஷன் படத்திற்கும் சினிமாகிராப் படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. படத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி  மட்டும் இயங்கச் செய்வது  சினிமாகிராப் படங்கள்.
நிலையான படம் ஒன்றில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் இயங்குமாறு அமையச் செய்வதே சினிமாகிராப். பார்ப்பதற்கு ஆச்சர்யமிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தருவது இவ்வகைப் படங்கள்.
ஒரு சிறிய வீடியோகிளிப்பைப் (Video Clip) பயன்படுத்தி இவ்வாறு குறிப்பிட்ட பகுதியை மட்டும் இவ்வாறு சினிமாகிராப் செய்ய முடியும். 
CS5 போட்டோஷாப் மென்பொருளில் இவ்வாறு வீடியோ கிளிப்பிங்கை திறந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் சினிமாகிராப் படங்களாக உருவாக்க முடியும்.
நீங்களும் இதைப்போன்ற சினிமா கிராப் படங்களை உருவாக்க முடியும்.
கீழுள்ள படங்களைப் பாருங்கள்.
இவை அனைத்தும் போட்டோஷாப் CS5 மென்பொருள் மூலம் சிறிய வீடியோகிளிப்பில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் சினிமாகிராப் படங்களாக மாற்றப்பட்டதுதான்.
உங்களிடம் Adobe Photoshop CS5 மென்பொருள் இல்லையெனில் இங்குசென்று தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இது முற்றிலும் இலவசம்.
அடோபி நிறுவனம் CS5 மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய தருகிறது. இது ஒரு ட்ரையல் வர்சன் ஆகும்.
முப்பது நாட்களுக்கு மட்டும் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இயக்க முடியும். ஒரிஜினில் மென்பொருள் வேண்டுவோர் கட்டணம் செலுத்தி தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

No comments:

Post a Comment

Thank you for using this blog.